நடிகர் அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘ஏகே 62’ படத்திலும் நடிக்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தாண்டின் இறுதியில் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்திற்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கிறார். நடிகர் அஜித்துடன் நயன்தாரா மற்றும் வைகைப்புயல் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ‘ஏகே62’ படத்திற்காக நடிகர் அஜித்துக்கு நூற்று ஐந்து கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அஜித் 100 கோடி மட்டுமே கேட்டதாகவும், பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக வலம் வரும் அவர் இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு தயாரிப்பு நிறுவனத் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா மிகவும் மகிழ்ச்சியடைந்து மேலும் 5 கோடி கொடுத்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.