மகாலக்ஷ்மி வீட்டில் தங்க என்ன செய்ய வேண்டும்?

ஆன்மீகம் / ஆன்மீக தகவல்கள்

மகாலக்ஷ்மி வீட்டில் தங்க என்ன செய்ய வேண்டும்?

ஒருவருடைய வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்து விட்டாலே போதும். நிம்மதிக்கு குறைவிருக்காது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இதற்காக நாம் பல பூஜைகளை செய்து வருகின்றோம். பல குறிப்புகளை பின்பற்றுகின்றோம். பணவரவிற்கு எத்தனையோ தந்திர, மந்திர வழிகளை எல்லாம் செய்கின்றோம். இருந்தும் சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிப்பதில்லை. எல்லோருக்கும் பலன் அளிக்கும் படியான ஒரு பரிகாரத்தை இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இயற்கையான நல்ல வாசம் தரக்கூடிய ஒரு வேர், இந்த வேர். நம் வீட்டில் இருந்தால் நமக்கு அதிர்ஷ்டம் தான். வாசம் நிறைந்த இடம் என்றாலே அந்த இடத்தில் கட்டாயம் மகாலட்சுமி இருப்பாள் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். இந்த வேரை முறையாக எப்படி பயன்படுத்தினால், நம் வீட்டில் சுபிட்சம் நிலைத்து நிற்கும் என்பதை பற்றியும், மகாலட்சுமியின் அம்சம் கொண்ட அந்த வேர் எது? என்பதைப் பற்றியும், அந்த வேரை நல்ல முறையில் நம் வீட்டில் எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்யும் அந்த வேர், வெட்டி வேர். இந்த வேர், சாதாரணமாக எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதை வாங்கி எப்போதுமே வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது. உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு சிறிய கண்ணாடி டம்ளரில் சுத்தமான தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு எலுமிச்சை பழத்தையும் போட்டு, இந்த வேரையும் சிறிதளவு அந்த தண்ணீரில் போட்டு வைத்தால் போதும். அந்த வாசத்திற்கு நம்முடைய வீடு மிகவும் மங்களகரமாக இருக்கும். இந்த வாசத்தில் தான் மகா லட்சுமி நிரந்தரமாக குடி இருப்பாள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த தண்ணீரை வாரத்திற்கு ஒருமுறை மாற்றவேண்டும். எலுமிச்சை பழத்தையும் மாற்ற வேண்டும். தண்ணீரில் இருக்கும் வேர் கெட்டுப் போக வாய்ப்பில்லை. மாதத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும்.

இதே போல் எந்த ஒரு கெட்ட சக்தியும், இந்த வேரிடம் நெருங்க முடியாது என்று சொல்லப்பட்டு உள்ளது. சிறிதளவு வெட்டிவேரை எடுத்து, ஒரு சிறிய மஞ்சள் துணியில் கட்டி உங்கள் வீட்டு நிலை வாசற் படியில் கட்டி வைத்தாலே போதும். உங்கள் வீட்டிற்குள் எந்த ஒரு கெட்ட சக்தியும் நுழையாமல் இருக்கும்

இந்த வெட்டிவேரை சிறிதளவு எடுத்து நன்றாக காயவைத்து அதன் பின்பு மிக்ஸியில் நன்றாக பொடி செய்து, சல்லடையில் சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். சிறிதளவு வேப்பங் கொழுந்தையும், நன்றாக உலர வைத்து அரைத்து  எடுத்துக் கொள்ளலாம். அதன்பின்பு, இந்த தூளை நெற்றியில் இட்டுக்கொள்ளும் விபூதியோடு கலந்து விடுங்கள். தினந்தோறும் அந்த விபூதியை நெற்றியில் வைத்துக் கொண்டு, வெளியே செல்லும் பட்சத்தில் நீங்கள் செல்லும் எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும் அது வெற்றியில் முடியும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இதோடு மட்டுமல்லாமல் கண் திருஷ்டியாக இருந்தாலும், எந்த ஒரு கெட்ட சக்தியும் நம்மை நெருங்காது என்பதும் உண்மை.

வெட்டிவேரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக ஊறவைத்து அதன் பின்பு, அந்த தண்ணீரை வீட்டின் மூலை முடுக்குகளில் தெளித்து விட்டாலும், எதிர்மறை ஆற்றல் நீங்கும் என்று சொல்லப்பட்டு உள்ளது. இப்படியாக வெட்டிவேரை சரியான முறையில் பயன்படுத்தும் பட்சத்தில், நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Comments
Write Your Own Comments
Submit

விளம்பரங்கள்

panpadutamil@gmail.com
தொடர்பு கொள்க