நோய்கள் தீர ஜெபிக்க வேண்டிய சப்த சிரஞ்சீவி மந்திரம்

ஆன்மீகம் / ஆன்மீக பாடல்கள்

*நோய்கள் தீர ஜெபிக்க வேண்டிய  சப்த சிரஞ்சீவி மந்திரம்*...

🔯சப்த சிரஞ்சீவிகள் : அனுமன், விபீஷணர், மகாபலி சக்கரவர்த்தி, மார்க்கண்டேயர், வியாசர், பரசுராமர், அசுவத்தாமன்

🔯தீராத நோய்கள் விரைவாக தீர சப்த சிரஞ்சீவிகள் நினைத்து அவர்களுக்கான மூல மந்திரங்களை உச்சரித்து வந்தால் தீராத நோய்கள் நல் ஆரோக்கியத்துடன் வாழலாம்.

🔯அகால மரணம் ஏற்படாமல் காக்கும்.

🔯உடல் நலம் குறை உள்ளவர்கள் ஏதேனும் மருந்து உட்கொண்டு வந்தால், மருந்து சாப்பிடும் முன்னர் இந்த மந்திரங்களை ஒரு முறையேனும் ஜெபித்து வந்தால் அவர்களின் நோய் விரைவில் குணமடைந்து உடல் நலம் பெறலாம்.

🔯அனுமனைத் தரிசிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்களும், பயன்களும் இதோ!

🔯சிரஞ்சீவி மந்திரம் :

ஓம் ஸ்ரீ ஆஞ்சனேயாய நமஹ

ஓம் ஸ்ரீ பரசுராமாய நமஹ

ஓம் ஸ்ரீ மார்க்கண்டேயர் நமஹ

ஓம் ஸ்ரீ மகாபலி சக்கரவர்த்தி நமஹ

ஓம் ஸ்ரீ வேதவியாசாய நமஹ

ஓம் ஸ்ரீ அஸ்வத்தாமா நமஹ

ஓம் ஸ்ரீ விபீஷணாய நமஹ

🔯மந்திரத்தை உச்சரிக்கும் முறை :

🔯வலது கையில் ஒரு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் கொண்டு அதில் ஒன்றிரண்டு அறுகம்புல் போட்டு வடக்கு நோக்கி நின்று அல்லது அமர்ந்து ஏழு சிரஞ்சீவிகளுக்கான மந்திரத்தை 21 முறை ஜெபித்து பின்னர் அந்த நீரை அருந்தி வந்தால் தீராத நோய்கள் தீர்ந்து நல் ஆரோக்கியம் பெறலாம்.

🔯உடல் நலம் இல்லாதவர்கள் உடல் நலம் விரைவில் தேறிவர அவர்கள் எழுந்த உடனும், உறங்கும் முன்னரும் ஏழு முறையாவது அவர்கள் முன் ஜெபிக்க வேண்டும்.

அவர்கள் ஏதேனும் மருந்து உட்கொண்டு வந்தால், மருந்து சாப்பிடும் முன்னர் இந்த மந்திரங்களை ஒரு முறையேனும் ஜெபித்து வந்தால் அவர்களின் நோய் விரைவில் குணமடைந்து உடல் நலம் பெறலாம்.

Comments
Write Your Own Comments
Submit

விளம்பரங்கள்

panpadutamil@gmail.com
தொடர்பு கொள்க