மின்மினி காதல்

கவிதைகள் / காதல்

காரிய இருளில்
தோன்றி மறையும்
மின்மினி ‌பூச்சியின் ஒளியைப் போல்
என் காதல்
தோன்றி மறையும்.
ஒரு போதும் அணைவதில்லை...

தொண்டைக்கும் அடிவயிற்றுக்கும்
இடையில் உருளும்
உருண்டையப் போல்
ஏறி இறங்கும்.
ஒரு போதும் உணவோடு
செரித்து விடுவதில்லை...

பப்பி காதலும் பருவத்தில் வந்த காதலும்
அவ்வப்போது அலைக்கழித்தாலும்
ஒரு போதும் என் காதல்
உன்னிடத்தில் போல்
யாரிடமும் நிலையாய்
நின்றதில்லை...

ஆழிப்பேரலையில்  
சிக்கி தவிக்கும்
சிறு படகாய்
வாழ்வின் மீதுள்ள
நம்பிக்கை சிதைந்தாலும்
எஞ்சிய நொடிகளிலும்
என் காதல்
உன்னை சுற்றி வராமல்

இருக்க போவதில்லை...


இப்படிக்கு
இலட்சுமணன்

Comments
Write Your Own Comments
Submit

விளம்பரங்கள்

panpadutamil@gmail.com
தொடர்பு கொள்க