கீரைகளின் மருத்துவ குணங்கள்
வெந்தயக்கீரை:

  • வெந்தயக்கீரை உடலுக்கு ஊக்கத்தை அளிக்க கூடியது. வயிற்றுப்புண்கள் மற்றும் பேதியை குறைக்கும். அதிகமாக இரும்பு சத்துக்கொண்டது.
  • இந்த கீரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்கள் தொடர்பான நோய்கள் குறையும்.

முருங்கைக்கீரை:

  • இந்த கீரை மிகவும் சக்தி மற்றும் வலிமை வாய்ந்த கீரை ஆகும். அதிக அளவில் இரும்பு சத்து கொண்டது. ஆண்மையை அதிகரிக்க செய்யும். மலச்சிக்கல் குறையும். உடலின் வெப்பத்தை குறைக்கும்.
  • இந்த கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண் மற்றும் இருதய நோய்கள் தாக்காமல் தடுக்கலாம். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
  • மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளை குறைக்கும். இரத்தச்சோகைகளை குறைக்கும்.

அரைக்கீரை:

  • அரைக்கீரை உடலில் இருக்கும் விஷங்களை முறிக்கும் சக்தி கொண்டது. மேலும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும்.
  • இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் காணப்படும். தேமல், சிரங்கு, சொறி போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

சிறுகீரை:

  • உடலுக்கு ஊக்கத்தை தந்து தளர்ச்சியை போக்க வல்லது. குடல் புண்கள் மற்றும் குடலுக்கு வலிமையை தரக்கூடியது. மலச்சிக்கல் குறையும்.
  • இந்த கீரைகளை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் உடலில் அதிக பித்தத்தை குறைக்கும்.

அகத்திக்கீரை:

  • இந்த கீரை உடலில் காணப்படும் அதிக அளவு வெப்பத்தை குறைக்கும். பித்தம் மற்றும் தலைச்சுற்று, மயக்கம் போன்ற பித்த சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குறைக்கும் வல்லமை வாய்ந்தது.
  • இரத்தத்தை சுத்திகரிக்கும். உடலில் ஏதேனும் விஷம் இருந்தால் அதை முறிக்கும் திறன் வாய்ந்தது. குடற்புழுக்களை அழிக்கும்.
  • அகத்தி கீரையை அளவாக எடுத்து சாப்பிட்டு வந்தால் நோய்களை போக்கும். அளவுக்கு மீறி சாப்பிட்டு வந்தால் பேதி ஏற்படும். அளவாக சாப்பிட்டு வளம் பெறுவோம்.

மணத்தக்காளி கீரை:

  • இது வயிற்றுப்புண்களை போக்கும் திறன் வாய்ந்தது. குடல் புண்களை குறைத்து குடலுக்கு பலம் அளிக்கும்.
  • இந்த கீரைகளை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கருப்பை கோளாறுகளை குறைக்கும்.

பாலக்கீரை:

  • இந்த கீரை உடலுக்கு வலிமையை தரக்கூடியது. மலச்சிக்கலை குறைக்கும்.
  • இதை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் நோய்கள் எதுவும் வராமல் தடுக்கும்.

புளிச்சக்கீரை:

  • இந்த கீரை உடலுக்கு வளமை தரக்கூடியது. இந்த கீரையை அதிகமாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கடுப்பு, இரத்தபேதி மற்றும் சீதபேதியை குறைக்கும்.

பசலைக்கீரை:

  • இந்த கீரை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. சிறுநீர் கட்டை குறைத்து நீரை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது.
  • இந்த கிரையை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும். குடல் புண்களை குறைக்கும்.