மஹாலட்சுமியின் பல்வேறு பரிமாணங்கள் பற்றிய பதிவுகள்...

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼மஹாலட்சுமியின் பல்வேறு பரிமாணங்கள் பற்றிய பதிவுகள்

அஷ்டலட்சுமியாக அருள்பாலிக்கும் மஹாலட்சுமியின் பல்வேறு பரிமாணங்களையும், அவள் வழங்கும் செல்வங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

1. ஆதி லட்சுமி
2. தனலட்சுமி
3. சந்தான லட்சுமி
4. கஜ லட்சுமி
5. வித்யாலட்சுமி
6. விஜய லட்சுமி
7. தைரிய லட்சுமி

ஆதி லட்சுமி:

இவளுக்கு ‘ரமணா’ என்ற பெயரும் உண்டு. மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் தரக்கூடியவள் இவள்.

தான்ய லட்சுமி:

உயிர் வாழும் ஜந்துக்கள் அனைத்துக்கும் உணவு அவசியம். அந்த உணவை வழங்கும் பூமித்தாய்தான் இவள்.

விவசாயத்தை வளப்படுத்தும் இவளே, பசித்தவனுக்கு உணவு கிடைக்கச் செய்யும் கருணைத் தாயாகவும் திகழ்கிறாள்.

தனலட்சுமி:

உணவுக்கு அடுத்தபடியாக மனித வாழ்க்கைக்குத் தேவையானது உடை, இருப்பிடம். இவற்றை அடைய வழி செய்வது ‘தனம்‘ எனப்படுகிறது. அந்த தனத்தைத் தந்தருளுபவள் இவள்.

சந்தான லட்சுமி:

நல்ல குடும்பமும் நல்ல குழந்தைகளும் ஒருவனது வாழ்க்கையை வளமாக்கும் செல்வங்கள். எத்தனை பொருட்செல்வம் இருந்தாலும், குழந்தைச் செல்வம் இல்லையே என்று ஏங்கித் தவிப்பவர்கள் எத்தனையோ பேர் உண்டு. அந்த ஏக்கத்தைத் தீர்த்து, குழந்தைச் செல்வத்தை அருளுபவள் இவள்..
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼