வெள்ளை முடியை இயற்கை முறையில் கருமையாக்குவது எப்படி?
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊறவைத்து அலச வேண்டும். இதனால் நரை முடி மறைய ஆரம்பிக்கும்.
ஹென்னா:
ஹென்னா என்னும் மருதாணி பொடியைக் கொண்டு முடியைப் பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப் பெறுவதோடு பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும்.
நெல்லிக்காய்:
நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும் படி நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறைவதை நன்கு காணலாம்.
கறிவேப்பிலை:
கறிவேப்பிலையை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அதனை தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து, பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காணமுடியும்.
வெந்தயம்:
வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி ஊறவைத்தோ அல்லது அதனை இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசியோ வந்தால், நரைமுடி மறையும்.
மிளகு:
தயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனை தலை முடிக்கு தடவி ஊறவைத்து அலசவேண்டும். இதன் மூலமும் வெள்ளை முடி மறையும்.
ப்ளாக் டீ
1 கப் ப்ளாக்டீயில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து, ஊறவைத்து அலச வேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்து வந்தால், வெள்ளை முடியை விரைவில் போக்கலாம்.