சொட்டையில் முடி வளர வைக்கும் வால் மிளகு
பட்டை + தேன்+ ஆலிவ் எண்ணெய் :

ஆலிவ் எண்ணெய் - முடிக்கேற்ப
தேன்- 2 ஸ்பூன் பட்டைப் பொடி - 1 டீ ஸ்பூன்
சீரகப் பொடி - 1 ஸ்பூன்

ஆலிவ் எண்ணெயை சுட வைத்து அதில் தேன் மற்றும் பட்டைப் பொடியை கலந்து தலையில் மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். தினம் செய்யலாம்.

வெந்தயம் + சீரகம்+ கருவேப்பிலை :

வெந்தயத்தை மற்றும் சீரகத்தை ஊற வைத்து மறு நாள் கருவேப்பிலையுடன் அரைத்து தலையில் தடவவும். 15 நாட்கள் தொடர்ந்து செய்தால் கூந்தல் வளர்ச்சி அபாரமாக இருக்கும். சொட்டையிடங்களிலும் பயனளிக்கும்.

வெங்காயம் + தேன் :

சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயத்தை அரைத்து அதனுடன் சிறிது தேன் கலந்து தலையில் தடவவும் . 20 நிமிடங்கள் கழித்து குளிக்கவும்.

வால்மிளகு + எலுமிச்சை விதை :

எலுமிச்சை விதைகள் - 7 பழம்
வால் மிளகு - 10

7 எலுமிச்சை பழங்களின் விதைகளை எடுத்து அதனுடன் வால் மிளகை சேர்த்து நன்றாக பொடி செய்து அதனை சொட்டை இருக்கும் இடத்தில் தடவுங்கள்.தினமும் இருமுறை இப்படி செய்து வந்தால் சொட்டையில் சில வாரங்களிலேயே முடி வளர்ச்சி தெரியும்.

கற்பூரம் + விளக்கெண்ணெய் :

விளக்கெண்ணெயை சூடுபடுத்தி, அதில் கற்பூரத்த்தை பொடி செய்து போடவும். கரைந்ததும் அதனை தலையில் தேய்த்து மசாஜ் செய்யவும். வாரம் 4 நாட்கள் செய்து வாருங்கள்.