ஜலதோஷக் காய்ச்சல் குறைய
  • சுக்கு, மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி, தேவதாரு ஆகியவற்றை சேர்த்து இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். அதில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு 1/8 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் ஜலதோஷத்தினால் ஏற்படும் காய்ச்சல் குறையும்.
  • ரோஜா இதழ்களை சிறிதளவு எடுத்துக் கொள்ளவேண்டும். அதே அளவு காட்டுச் சீரகத்தையும் எடுத்துக் கொள்ளவேண்டும். இரண்டையும் அம்மியில் வைத்து நன்றாக அரைத்து ஒரு மெல்லிய துணியில் கனமாகத் தடவி அதை தொடர்ந்து முகர்ந்து பார்த்து வந்தால் ஜலதோஷம் குறையும.
  •  சர்க்கரை சேர்க்காத கடுங்காப்பியை காலையில் குடித்து வந்தால் ஜலதோஷம் குறையும்.
  • யூகலிப்டஸ் எண்ணெயை தொண்டை மற்றும் மார்பில் நன்கு தடவி வந்தால் ஜலதோஷம், இருமல், நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் போன்ற சுவாச சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும்.