பச்சை திராட்சையை சாப்பிட்டால் சில நாட்களில் பக்காவா எடை குறையும்...
குளிர் காலத்தில் திராட்சை (Grapes) சாப்பிட விரும்பாதவர்கள் இருக்க மாட்டார்கள். சாறு நிறைந்த, இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட பழம் சாப்பிட மிகவும் சுவையாக இருப்பதோடு ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதில் ஏராளமனா சத்துக்கள் உள்ளன. இதை ஊட்டச்சத்தின் பொக்கிஷம் என்றே கூறலாம். திராட்சையில் வைட்டமின் ஏ, சி, நார்ச்சத்து, புரதம், இரும்பு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை நல்ல அளவில் காணப்படுகின்றன. இது தவிர, திராட்சையில் ஆண்டி ஆக்சிடெண்ட் பண்புகளும் நிறைந்துள்ளன.
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு திராட்சை ஒரு சிறந்த வழியாக இருக்கும். இவற்றை உட்கொள்வதன் மூலம் விரைவாக உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் உடல் எடையை குறைக்கும் விதம் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
திராட்சையின் சிறந்த விஷயம் என்னவென்றால், இது குறைந்த கலோரிகள் கொண்ட பழம். 100 கிராம் திராட்சையில் 70 கலோரிகள் மட்டுமே உள்ளது. ஆனால் அது ஊட்டச்சத்து நிறைந்தது. இதில் நல்ல அளவு கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. எடை இழப்புக்கு, குறைந்த கலோரி உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது முக்கியமான விஷயமாகும். ஏனெனில் ஒரு நபர் எடை குறைக்க (Weight Loss) வேண்டியிருக்கும் போது, அவர் தினசரி கலோரி உட்கொள்ளலை விட 200-300 குறைவான கலோரிகளை உட்கொள்ள வேண்டும்.
இத்தகைய சூழ்நிலையில், திராட்சையை உணவில் சேர்த்துக்கொள்வது, குறைந்த கலோரிகளுடன் (Low Calorie) நீண்ட நேரம் வயிற்றை நிரம்பிய உணர்வுடன் வைத்திருக்கவும், தேவையான ஊட்டச்சத்தைப் பெறவும் மிகவும் உதவியாக இருக்கும். தொப்பை கொழுப்பை (Bellly Fat) குறைத்து எடை குறைக்க விரும்பும் மக்களுக்கு பச்சை திராட்சை ஒரு சிறந்த சிற்றுண்டி விருப்பமாக இருக்க முடியும்.
நாம் மேலே குறிப்பிட்டுள்ளபடி, திராட்சையில் கலோரிகளின் அளவு மிகவும் குறைவு. இது வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கும் ஒரு பழம். இதில் உள்ள புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் வயிற்றை நிரப்பவும், பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. திராட்சையை உட்கொள்வதன் மூலம் நாம் பிற ஆரோக்கியமற்ற, அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது.
கூடுதலாக, திராட்சையில் உள்ள ரெஸ்வெராட்ரோல் ஆன்டிஆக்ஸிடன்ட் உடலில் உள்ள கொழுப்பு அமிலங்களை வளர்சிதைமாற்றம் செய்ய உதவுகிறது என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இது உடலுக்கு ஆற்றலை தருவதோடு, வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. இது கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது. திராட்சையில் அதிக ஃபிளாவனாய்டுகள் உள்ளன, இவை பல வழிகளில் எடை குறைக்க உதவுகின்றன.