தேகம் பளபளக்க இதை செஞ்சா போதும் ...!

அழகு குறிப்புகள் /

தேகம்  பளபளக்க இதை  செஞ்சா போதும் ...!

உடலில் கை, கால் முட்டிகளில் கருப்பு நிறம் அதிகமாக காணப்படும். இதை எப்படி போக்குவது என்பது பெண்களுக்கு உள்ள இயல்பான சந்தேகம். 

கை, கால் முட்டிகளில் கருப்பு நிறம் அதிகம் இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சப்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கருப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் அலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் உடல் மென்மையாகிறது.

நகங்களை வெட்டும் முன் எண்ணெய்யை தடவி விட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும். 

பாத வெடிப்பு பெண்களுக்கு உள்ள பெரிய பிரச்னை. அழகான பாதங்களை பெற பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பெடிக்யூர் செய்து கொள்ளலாம்.

உப்பு, ஷாம்பூ, எலுமிச்சம் பழச்சாறு கலந்த வெந்நீரில் கால்களை ஊற வைத்துக் கழுவலாம். அதிக வேலைகள் காரணமாக கால்களில் வலி எடுத்தால் கால்களை சுடுதண்ணீரில் ஊற வைத்தால் சரியாகும்.

பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க விளக்கெண்ணை ஒரு ஸ்பூன், பன்னீர் இரண்டு ஸ்பூன், எலுமிச்சம் சாறு ஒரு ஸ்பூன் மூன்றையும் கலந்து வெந்நீரில் பத்து நிமிடம் காலை ஊறவிட்டு, பின்பு இக்கலவையைப் பூசிவர வெடிப்பு நீங்கும்.

Comments
Write Your Own Comments
Submit

விளம்பரங்கள்

panpadutamil@gmail.com
தொடர்பு கொள்க