வறண்ட சருமம்... சரியாக என்ன செய்யணும் தெரியுங்களா?
வறண்ட சருமம்... சரியாக என்ன செய்யணும் தெரியுங்களா?

ஆண்களை விட பெண்களுக்கு வறண்ட சருமம் தான் பெரிய பிரச்னை. சிலருக்கு உடல் முழுவதும் பாளம், பாளமாக வெடித்தது போலும் காணப்படும். இந்த வறண்ட தன்மை நீங்க என்ன செய்யணும் தெரியுங்களா?

​தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார்  அரை மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.

தோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழத்துண்டுகளை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள். தயிர் போல் மாறும். அதை நன்றாக ஆற விட்டு, அதில் தேவையான அளவு எடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவிவிடுங்கள். இப்படி தினமும் செய்து வாருங்கள். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போவதோடு, முகம் பிரகாசம் அடைய ஆரம்பித்து விடும்.

தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும். இப்படி தினசரி செய்து வந்தால் வறண்ட சருமம் போயே போச்சு.