உங்களை எப்பவும் இளமையாக வைக்க 5 அரிய மூலிகைகள்
ஜின்செங்க் - (குண சிங்கி)
இது ஆசியா மற்றும் அமெரிக்காவில் பரவலாக காணப்படுகிறது. இது ரத்தத்தை சுத்தப்படுத்தும். நச்சுக்களை வெளியேற்றும். சரும செல்களை புதுப்பிக்கும். இது போதாதா இள்மையாக இருக்க. அதோடு உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். பளபளப்பான சுருக்கமில்லா சருமத்தையும் , உடலுக்கு பலத்தையும் தரும்.
பில்பெர்ரி :
பில்பெர்ரியில் மிக அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கின்றன. முதுமையை தடுக்கும். புதிய செல்களை உருவாக்கும். சுர்க்கம், தழும்பை மறைய வைக்கும். சாப்பிடவும், சருமத்திற்கும் உபயோகப்படுத்தலாம்.
ஜிங்கோ :
இது ஜிங்கோ என்ற மரத்திலிருந்து பெறப்படுகிறது. இது ரத்த குழாயை சுத்தப்படுத்தும் அதிக ஆக்ஸிஜன் மூளைக்கும் கண்களுக்கும் செல்ல உதவுகிறது. முதுமைக்கு எதிராக போராடுகிறது. சருமத்திற்கு போஷாக்கு அளித்து பொலிவாக வைப்பதில் முக்கிய பங்கு கொண்டுள்ளது.
வல்லாரை :
வல்லாரை மருத்துவ குணங்கள் பெற்றவை என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இது அழகிற்காகவும் உபயோகபப்டுத்தப்படுகிறது. இது சரும செல்களை புதுப்பிக்கிறது. சுருக்கங்களை தடுக்கும். அதிக ஆக்ஸிஜனை உடலில் பெற உதவும். இளமையாக இருக்க வல்லாரை மிக முக்கியமான மூலிகை.