வயசு ஏற ஏற அழகு கூடுதே….என்றும் இளமைதான் நம்ம பிரியா பிரின்ஸ்..
செய்தி வாசிப்பாளராகத் திரை வாழ்க்கையைத் தொடங்கி, தற்போது பல சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார் பிரியா பிரின்ஸ். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் ஜர்னலிசம் படித்துள்ளார். விஜய் டீவியில் ஒளிபரப்பான தமிழ் கடவுள் முருகன் தொடரில் பார்வதி கேரக்டரில் நடித்து இருந்தவர் ப்ரியா. அந்த தொடருக்கு பின்னர் மாப்பிள்ளை, பொன்மகள் வந்தால், கண்மணி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ள பிரியா ரஜினியின் 2.0, சூர்யாவின் ‘பசங்க 2’ போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.தற்போது சன்டிவியின் ஹிட் தொடரான கண்ணான கண்ணே சீரியலில் நடித்து வருகிறார். பிரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.