“என்னைப்போல் சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்களுக்கு இதுதான் பெஸ்ட்” – ரோஜா நாயகி ஸ்கின்கேர் டிப்ஸ்
நான் இப்போ மேக்-அப் ரிமூவ் பண்ண போறேன். யாரும் பயந்துடாதீங்க” என்ற எச்சரிக்கையோடு ஆரம்பமானது ரோஜா நடிகை பிரியங்கா நல்கரியின் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட மேக்-அப் அகற்றும் காணொளி. தற்போது டிஆர்பி-ல் டாப் இடத்தில் இருக்கும் ‘ரோஜா’ சீரியலில் ரோஜாவாக மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார் பிரியங்கா. அவருடைய பியூட்டி டிப்ஸ் வீடியோக்கள் பல இருந்தாலும், மேக்-அப் அகற்றும் வீடியோ பெரும்பாலான வியூஸ்களை பெற்றிருக்கின்றது.


“நான் மேக்-அப் அகற்ற முதலில் பயன்படுத்துவது தேங்காய் எண்ணெய். யாரும் ஷாக் ஆகிடாதீங்க. என்னுடைய சருமம் மிகவும் சென்சிடிவ் என்பதால், என் சரும நிபுணர் தேங்காய் எண்ணெய்யைத்தான் பயன்படுத்தப் பரிந்துரை செய்திருக்கிறார். சிறிதளவு எண்ணெய் எடுத்து கண்களில் முதலில் சுத்தம் செய்ய வேண்டும். அழுத்தம் அதிகம் கொடுக்கக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.கண்களைத் தொடர்ந்து, உதடு மற்றும் முகம் முழுவதும் எண்ணெய் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்து, பிறகு டிஷ்யூ பேப்பர் கொண்டு முகத்தை சுத்தம் செய்யவேண்டும். அதனைத் தொடர்ந்து,ஃ பேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தைக் கழுவுவேன். அடுத்தபடியாக சீரம்.


சீரம் உபயோகிக்கும்போது எப்போதுமே சிறிதளவு மட்டுமே எடுத்துப் பயன்படுத்தவேண்டும். நிறைய எடுத்தால் ஸ்கின் டேமேஜ் ஏற்படும். அதனால் கவனமாக இருக்கவேண்டும். சீரம்க்கு அடுத்து, மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்தலாம். இது சருமத்தை மிருதுவாக்கும். எப்போதுமே க்ரீம் அப்ளை செய்தால் நன்கு மசாஜ் செய்யவேண்டும்.


எனக்கு சென்சிடிவ் சருமம் என்பதால் ஒவ்வொரு பொருளையும் பார்த்துப்பார்த்துதான் தேர்ந்தெடுப்பேன். அந்த வரிசையில், தேங்காய் எண்ணெய் மிகவும் நல்லது. முகத்திற்கு நல்ல பொலிவு கொடுப்பதோடு, எந்தவித பாதிப்பையும் இது ஏற்படுத்தாது. என்னைப்போன்று சென்சிடிவ் சருமம் உடையவர்கள் நிச்சயம் இயற்கைப் பொருள்களை மட்டுமே பயன்படுத்துங்கள்”.