வெந்தயம், லெமன், தேன்… எப்படி சாப்பிடுவது? எப்போது சாப்பிடுவது?
பொதுவாக பெரும்பாலான இந்தியர்களின் சமையலறைகளில் வெந்தயத்திற்கென தனி இடம் உண்டு. ஏனென்றால் இவை பல்வேறு மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றவையாக உள்ளன. இதன் இலைகள் சுவையான டிஷ் தயாரிக்கவும், இதன் விதைகள் நீரிழிவு, செரிமான நோய்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்துதல் போன்ற பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கவும் உதவுகின்றன. 

இவ்வளவு நன்மைகளைத் தரும் வெந்தயத்தை உட்கொள்ள சரியான நேரம் எது என நம்மில் பலருக்கு தெரியாது. வெந்தயத்தின் நற்பண்புகள் குறித்து நாம் படிக்கையில், அவற்றை காலை வேளையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டும் என பலர் பரிந்துரை செய்து இருப்பார்கள்.  ஆனால் வெறும் வயிற்றில் உண்பது சிலருக்கு பிடிக்காது. எனவே இவற்றை உங்கள் உணவுகளான கறி, பருப்பு அல்லது பிற உணவு தயாரிப்புகளில் சேர்த்துக்கொள்வது நனமை பயக்கும்.


வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து ஆராய்ச்சிக்கான சர்வதேச இதழில் 2015 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், தினசரி 10 கிராம் வெந்தயம் விதைகளை சூடான நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் வகை -2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவற்றுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்கும் திறன் உள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெந்தயத்தை உட்கொள்வதற்கான சிறந்த வழி எது?

ஒரு கிளாஸ் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை சேர்த்து சுமார் 10 நிமிடங்களுக்கு ஊற விடவும். இப்போது எலுமிச்சை மற்றும் ஒரு சிட்டிகை தேன் சேர்த்து வடிகட்டி, ஒரு  சூடான தேநீரை போல அனுபவித்து வரலாம். 

வெந்தயத்தின் நன்மைகள்

* மெதி தானா என்று அழைக்கப்படும் வெந்தயம் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

* இது தவிர, பெருங்குடல் புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுக்கவும், அமில ரிஃப்ளக்ஸ் அல்லது நெஞ்செரிச்சல், வயிற்று வலி மற்றும் மலச்சிக்கலைக் கையாளவும் இது உதவுகிறது.

* வெந்தயம் விதைகளை தவறாமல் உட்கொள்வது நம் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அழிக்கக்கூடும். இதனால் சுருக்கங்கள் மற்றும் கருமையான இடங்கள் தடுக்கப்படும்.

* இது கடுமையான கருப்பை சுருக்கத்தையும் தூண்டுகிறது.

* வெந்தயம் உள் வலி மற்றும் வீக்கம், தசை வலி மற்றும் நிணநீர் வீக்கத்திற்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.