குறைந்த நாட்களில் ஐந்து கிலோ எடை குறையும் மிலிட்டிரி டயட்
உடல் எடையை குறைப்பதற்காக மிலிட்டிரி டயட் தற்போது வேகமாக பரவி வருகிறது. வேகமாகவும் அதே சமயத்தில் ஆரோக்கியமான முறையில் ஒரு வாரத்தில் 5 கிலோ வரை எடையை குறைக்க முடிவதால் பலரும் மிலிட்டிரி டயட்டை பின்பற்றி வருகின்றனர்.
முதல் மூன்று நாட்கள் :
இந்த மில்லிட்டிரி டயட் மூன்று நாட்களுக்கு மட்டுமே. அந்த நாட்களிலேயே உங்கள் உடலில் உள்ள பெரும்பாலான கொழுப்பு நீக்கப்படும். அதோடு உடலின் மெட்டபாலிசத்தையும் அதிகரித்திட முடியும். அதற்கு பிறகான நான்கு நாட்களுக்கு கடந்த மூன்று நாட்களில் செய்தவற்றையே ரிபீட் செய்திட வேண்டும். ஒரு வாரம் முடிந்து மறுவாரமே மீண்டும் இதே டயட்டை தொடரக்கூடாது.
முதல் நாள் :
காலை உணவாக ஒரு கப் காபி, ஒரு துண்டு டோஸ்ட்,அரை கப் திராட்சை பழம் இரண்டு டேபிள் ஸ்பூன் பீனட் பட்டர். மதியத்திற்கு ஒரு துண்டு டோஸ்ட்,ஒரு மீன்,ஒரு கப் காபி அல்லது டீ. இரவு உணவாக ஒரு கப் பச்சை பட்டானி, 50 கிராம் மட்டன், சிறிய வாழைப்பழம் அல்லது வேறு எதாவது ஒரு பழம் எடுத்துக்கொள்ளலாம், ஒரு கப் ஐஸ்க்ரீம்.(வெண்ணிலா )
இரண்டாம் நாள் :
காலை உணவாக ஒரு ஸ்லைஸ் டோஸ்ட், ஒரு முட்டை,சிறிய வாழைப்பழம் எடுத்துக்கொள்ளலாம். மதியத்திற்கு வேகவைத்த முட்டை ஒன்று, ஒரு கப் காட்டேஜ் சீஸ் எடுத்துக் கொள்ளலாம். இரவு உணவாக அரை கப் கேரட், ஒரு கப் ப்ரோக்கோலி, சிறிய வாழைப்பழம் அல்லது வேறு பழம் ஒரு கப் ஐஸ்க்ரீம்(வெண்ணிலா)
மூன்றாம் நாள் :
ஒரு துண்டு சீஸ், ஒரு ஆப்பிள் பழம் காலை உணவாக எடுத்துக்கொள்ளுங்கள் மதியத்திற்கு ஒரு டோஸ்ட் மற்றும் ஒரு முட்டை எடுத்துக் கொள்ளுங்கள். இரவு உணவாக ஒரு மீன், ஒரு கப் வெண்ணிலா ஐஸ்க்ரீம் , எதாவது ஒரு பழம் ஒரு கப். உங்களுக்கு உடலில் ஏதாவது பிரச்சனை இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகு இந்த டயட்டை பின்பற்றுங்கள். அதிக எடை இருப்பவர்கள் இந்த டயட் இருக்கும் போதே சில உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
எப்படி செயல்படும் :
ஒரு வாரத்திற்கான இந்த டயட் ப்ளானை இரண்டாக பிரித்துக் கொள்கிறார்கள். முதல் மூன்று நாட்கள் ஒரு பிரிவாகவும் அடுத்த நான்கு நாட்கள் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்படுகிறது. முதல் மூன்று நாட்களில் கலோரி குறைந்த உணவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஒரு நாளில் 1100 முதல் 1400 கலோரிகளையே எடுத்தது போலாகும்.நடுவில் திண்பண்டங்கள் எதுவும் எடுக்கக்கூடாது. இது சராசரியாக ஒருவர் தினமும் சாப்பிடும் கலோரிகளை விட குறைவானது. தொடர்ந்து அடுத்த நான்கு நாட்களும் கலோரி குறைந்த உணவே எடுத்துக் கொள்வதால் கொழுப்பு கரைக்கப்படும். உடலுக்கு தேவையான எனர்ஜியை பெற கொழுப்பு கரையப்படுவதால் உடல் எடை குறைந்திடும்