ஆயுளைக் குறைக்கும் இந்த ‘தவறுகளை’ செய்ய வேண்டாம்... நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு...
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லும் பரிந்துரைகளில் தற்போது முக்கியமான ஒன்று சேர்ந்துவிட்டது. நீரிழிவு நோய் குறித்த ஆய்வுகளின் முடிவுகளே, மருந்துவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையாகிறது. நீரிழிவு நோயாளிகள் செய்யும் சில தவறுகள், கல்லீரல் பாதிப்படைய வழிவகுக்கும் என்று ஒரு புதிய ஆய்வு சொல்கிறது. நொறுக்குத் தீனிகள் மற்றும் துரித உணவுகளை சாப்பிடுவது கல்லீரலுக்கு நிறைய சேதத்தை ஏற்படுத்தும்.

கல்லீரல் என்பது நமது முழு உடலின் செயல்பாடும் இணைக்கப்பட்டுள்ள ஒரு முக்கியமான உறுப்பு ஆகும். உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலம் உடலை நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. அதனால்தான், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கியமாகக் கருதப்படுகிறது. தவறான உணவுப் பழக்கம் கல்லீரலின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.

அதனால்தான், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க, கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சிகரெட் மற்றும் ஆல்கஹால் போன்றவை கல்லீரலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று கருதப்படுகிறது. மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் ஆகியவை கல்லீரலின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது மற்றும் கல்லீரலில் கொழுப்பு படிவது போன்ற நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | பைல்ஸ் பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளுக்கு 'நோ' சொல்லிடுங்க

ஒரு புதிய ஆய்வின்படி, நொறுக்குத் தீனிகள் மற்றும் துரித உணவுகளை உண்பதும் கல்லீரலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் மருத்துவ காஸ்ட்ரோஎன்டாலஜி மற்றும் ஹெபடாலஜியில் ((Clinical Gastroenterology and Hepatology) என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

ஒருவர் பர்கர் அல்லது பீட்சாவை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவு, வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறதோ இல்லையோ, உங்கள் கல்லீரலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். என்று தெரியவந்துள்ளது. ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித உணவுகளை சாப்பிடுவது கொழுப்பு கல்லீரல் நோய் அபாயத்தை அதிகரிக்கிறது, அதிலும், நீரிழிவு நோயாளிகளுக்கு பிறரை வட அதிக ஆபத்து உள்ளது. 

கொழுப்பு கல்லீரல் நோய் ஆபத்து அதிகம்
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, துரித உணவு மற்றும் நொறுக்குத் தீனிகளை உண்ணும் பழக்கம், உடல் பருமனானவர்களிடமும், சர்க்கரை நோயாளிகளிடமும் காணப்படுகிறது. இந்த இரண்டு வகைகளிலும், அன்றாட உணவில் 20% க்கும் அதிகமான கலோரிகள் துரித உணவு அல்லது நொறுக்குத் தீனிகளில் இருந்து வருவதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

இதன் காரணமாக, கல்லீரலில் கொழுப்பு சேரத் தொடங்குகிறது, இப்படி சேரும் கொழுப்பினல், மது அருந்தாதவர்களுக்கும், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் அபாயம் அதிகரிக்கத் தொடங்குகிறது.

மேலும் படிக்க | எச்சரிக்கை! உடலில் கொலஸ்ட்ரால் இருப்பதற்கான அறிகுறிகள்!

பொதுவாக, 5% கொழுப்பு ஆரோக்கியமான கல்லீரலில் சேமிக்கப்படுகிறது.  துரித உணவுகளை சாப்பிடுவது கல்லீரலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

நீரிழிவு நோயாளிக்கு ஃபாஸ்ட் ஃபூட் அதிக தீங்கு விளைவிப்பது ஏன்?
பர்கர், பீட்சா, ஹாட் டாக், சமோசா, டோனட்ஸ் மற்றும் நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளில் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் சோடியம் அதிகம் உள்ளது. இவை அனைத்தும் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு மோசமானதாக கருதப்படுகிறது. அதனால் தான், துரித உணவுகளை சாப்பிடுவதால் கல்லீரல் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகள், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், கொழுப்பு கல்லீரல் நோய் அல்லது நாள்பட்ட கல்லீரல் நோய்களைத் தவிர்க்கவும், முதலில் துரித உணவை உட்கொள்வதை நிறுத்த வேண்டும். இதைத் தவிர, கல்லீரலை நோய்களில் இருந்து பாதுகாக்க நீரிழிவு நோயாளிகளுக்கு சில முக்கியமான குறிப்புகளை இந்த ஆய்வு தருகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான கல்லீரலுக்கு உணவு தொடர்பான மருத்துவ பரிந்துரை
நாள் முழுவதும் அதிக தண்ணீர் குடித்து, உடலின் நீர்ச்சத்தை பராமரிக்கவும்
வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்.
அளவாக உப்பை உட்கொள்ளவும்.
தேநீர், பால் அல்லது அன்றாட உணவுகளில் சர்க்கரையை தவிர்க்கவும், இல்லையென்றால். சர்க்கரையின் அளவை படிப்படியாகக் குறைத்து, முடிந்தவரை இனிப்புகளை குறைக்கவும்.
சிவப்பு இறைச்சி உட்கொள்ளவதைக் குறைக்கவும்.
மாவு, சர்க்கரை, வெள்ளை அரிசி மற்றும் பேக்கரி பொருட்கள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்.