பாதங்களை அழகாய் பராமரிப்பதிலிருந்தே ஒருவரின் அழகுணர்ச்சியை கண்டுபிடிக்கலாம். வெளியே ஏதாவது விசேஷத்திற்கு முகத்தில் மேக்கப் லிப்ஸ்டிக், கால்களில் வெடிப்போடு போனால் நன்றாகவா இருக்கும்.
மாதம் இருமுறை பெடிக்யூர் செய்து கொள்ளலாம். இவை பாத நகங்களின் இடுக்குகளில் இருக்கும் அழுக்குகளை அகற்றி புத்துணர்வோடு வைத்திருக்கும்.
பார்லர் போக நேரமில்லையா வீட்டிலேயே நீங்கள் பார்லர் சென்று வந்ததுபோல் அழகான பாதங்களை பெறலாம். உங்களுக்கு மிருதுவான மெத்தென்று பாதங்கள் பெற இதை வாரம் ஒரு முறை ட்ரை பண்ணுங்க.
உங்கள் பாதங்களில் சீக்கிரம் வறட்சி ஏற்பட்டுவிடும். அங்கு மிக மென்மையான சருமம் இருப்பதால், வறட்சி ஏற்பட்டால் எளிதில் சுருங்கி வயதான தோற்றத்தை பாதங்களுக்கு தந்துவிடும். எனவே ஈரப்பதத்துடன் கால்களை வைத்துக் கொள்வது மிக அவசியம்.
மிருதுவான கால்களுக்கு :
தேவையான பொருட்கள்:
சோப் நிறைந்த நீர் - கால்கள் நனையும் அளவிற்கு
மார்பிள் கற்கள்- கை நிறைய
ரோஜா இதழ்கள் - கை நிறைய
பால் - அரை லிட்டர்
வேப்பிலை - கை நிறைய
கோதுமை முளை எண்ணெய் - 2 டீஸ்பூன்
சந்தன எண்ணெய் - 5 துளிகள்
செய்முறை:
ஒரு டப்பில் வெதுவெதுப்பாய் சூடான நீர் எடுத்து அதில் மேலே சொன்னவற்றை கலக்குங்கள். பின்னர் அதில் பாதங்களை 20 நிமிடங்கள் அமிழ்த்துங்கள்.
அதன்பின் ப்யூமிக் கல்லை கொண்டு பாதங்களை சுத்தப்படுத்துங்கள். உங்கள் கால்கள் மிருதுவாய் பட்டுப் போல மாறும்.
கடல் உப்பு மற்றும் ஓட்ஸ் ஸ்க்ரப் :
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ்- - 1 கப்
பாதாம் எண்ணெய் - 100 மி.லி.
கடல் உப்பு - 100 கிராம்
தேன் - 100 கிராம் அ
ரிசி மாவு - 100 கி
புதினா எண்ணெய்- 10 துளிகள்
செய்முறை:
மேலே கூறியவற்றை எல்லாம் கலந்து ஒரு பாட்டிலில் எடுத்துவைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் சமயத்தில் பாட்டிலை குலுக்கி அதிலிருந்து கலவையை எடுத்து பாதங்களுக்கு ஸ்க்ரப் செய்யுங்கள்.
பாதங்களில் இருக்கும் அழுக்கு, இறந்த செல்கள் அகன்று மென்மையாகும். வெடிப்பு மறையும்.
ஈரப்பதம் அளிக்கவேண்டும் :
இரவில் பாதங்களுக்கு தினமும் எண்ணெய் தடவி படுக்கச் சென்றால் சருமம் சுருக்கங்கள் இல்லாமல் மிருதுவாக மாறும்.
தேவையான பொருட்கள்:
விளக்கெண்ணெய் - 2 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 2 டீஸ்பூன்
பாதாம் எண்ணெய் - 2 டீஸ்பூன்
இந்த எண்ணெய்களை கலந்து தினமும் இரவில் பாதங்களுக்கு மசாஜ் செய்தால் பாதம் பட்டு போலாகும். வாசலினை குதிகால்களுக்கு தடவுங்கள். தினமும் இப்படி செய்தால் உங்கள் பாதம் பூனையின் பாதங்களைப் போல் மெத்தென்று ஆகும்.
1 நிமிட தீர்வு :
உங்களுக்கு நேரம் பற்றாக்குறை இருந்தால், எலுமிச்சை சாறினை சர்க்கரையில் கலந்து பாதங்களில் ஸ்க்ரப் செய்யுங்கள். தினமும் ஒரு நிமிடம் எடுத்துக் கொண்டால் போதும். 15 நாட்களில் வித்தியாசம் காண்பீர்கள்.