கண்வலி குறைய
வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்ணில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கண்வலி குறையும்.

 கருவேலம் கொழுந்து இலையுடன் சீரகத்தை சேர்த்து அரைத்து வலியுள்ள கண்ணை மூடச் செய்து அதன்மேல் வைத்து பின்பு ஒரு வெற்றிலையை அதன்மேல் வைத்து சுத்தமான துணியால் கட்டிவிடவேண்டும். இரவில் கட்டி காலையில் அவிழ்த்து விடவேண்டும். இவ்வாறு மூன்று நரட்கள் செய்து வந்தால் கண்வலி குறையும்.

 புளியம்பூவை அரைத்து கண்ணை சுற்றி பற்று போட்டால் கண்வலி, கண்ணில் ஏற்படும் சிவப்பு குறையும்.

 100 கிராம் பருப்பை  வேகவைத்து அத்துடன்  தேங்காய் துருவலையும் சேர்த்து சாப்பிட்டால் கண்வலி குறையும்.

மூக்கரட்டை இலை,பொன்னாங்கண்ணிக் கீரை,கீழாநெல்லி  இவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து தினமும் 1 தேக்கரண்டி அளவு சாப்பிட கண் வலி குறையும்.

ஒரு க‌ர‌ண்டி சீர‌கத்தை எடுத்து தூள் செய்து ந‌ல்லெண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர கண்வலி குறையும்.

துளசி இலையை சாறு எடுத்து அந்த சாற்றினை கண்ணின் மேல் தினமும் தடவி வர கண்வலி குறையும்.

முட்டையின் வெள்ளைக்கருவில், 10 கிராம் படிக்காரத் தூளை போட்டுக் கரைத்து அதை வெள்ளத்துணியில் நனைத்துக் கண்ணின் மேல் வைக்க கண்வலி குறையும்.