மூக்கடைப்பு குறைய
 • இலவங்கப்பட்டை தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து சிறிது தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.
 •  புதினா இலைச்சாறுடன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஆரஞ்சு பழச்சாறு கலந்து குடித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.
 •  புதிய ரோஜா மலரை எடுத்து முகர்ந்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.
 • ஆகாயத்தாமரை, ஆதொண்டை வேர் இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி அந்த எண்ணெயை த‌லைக்கு தேய்த்து குளித்து வந்தால் மூக்கடைப்பு, தொண்டைக்கட்டு குறையும்.
 •  சிற்றகத்தி இலைச்சாறு, வெள்ளை வெங்காயச்சாறு வகைக்கு 1/2 லிட்டர் எடுத்து ஒரு லிட்டர் நல்லெண்ணையுடன் கலந்து, அத்துடன் மிளகு, சீரகம், கருஞ்சீரகம், சாம்பிராணி வகைக்கு 5 கிராம் எடுத்து பாலில் அரைத்து சேர்த்துச் சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் ஒருமுறை தலைக்குத் தேய்த்துக் குளித்துவந்தால் மூக்கடைப்பு குறையும்.
 • நொச்சி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சாறு எடுத்து, சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்து ஆற வைத்து உச்சந்தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் குளிக்க மூக்கடைப்பு குறையும்.
 • மா விளங்காய் இலைகளை உலர்த்தி பொடி செய்து அதைத் தணலில் இட்டுப் புகையைச் சுவாசித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.
 • அகில் கட்டை ஊறவைத்த நீர், நல்லெண்ணெய், பசும்பால் ஒரு படி எடுத்து அதில் அதிமதுரம், தான்றிக்காய்த் தோல் சிறிது எடுத்து பசுவின் பால் விட்டு அரைத்து தலைக்குத் தடவி வந்தால்  மூக்கடைப்பு  குறையும்.
 •  அகத்தி இலைச் சாற்றில் சமஅளவு தேன் கலந்து சாப்பிட்டால் மூக்கடைப்பு குறையும்.
 • ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
 • விரலி மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் அடிக்கடி சுவாசித்தால், மூக்கடைப்பு  குறையும்.
 • பூவரசு, வெள்ளெருக்கு, மல்தாங்கி இவற்றின் வேர், கஸ்தூரி மஞ்சள், சிறுநாகப்பூ, வெடியுப்பு, புனுகு இவற்றை ஓர் எடையாய் துளசி சாற்றுலாட்டித் துணியில் சேர்த்து திரிபோல் செய்து அதை புகை உண்டாக்கி அப்புகையை முகர மூக்கடைப்பு குறையும்.