இன்றைய ராசிபலன் - 12.06.2024 - புதன்கிழமை

  🔯ராசி பலன்கள்🔯🚩

🔔12-06-2024🔔

மேஷம்
ஜூன் 12, 2024


எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். பணி நிமித்தமான அலைச்சல் ஏற்படும். மனை சார்ந்த விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். பொழுதுபோக்கு விஷயங்களால் கையிருப்பு குறையும். அரசு விஷயங்களில் பொறுமையை கையாளவும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் :  இளம் ஆரஞ்சு நிறம்

அஸ்வினி : திட்டமிட்டு செயல்படுவீர்கள்.
பரணி : ஏற்ற, இறக்கமான நாள்.
கிருத்திகை : பொறுமையை கையாளவும்.
---------------------------------------


ரிஷபம்
ஜூன் 12, 2024


செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். கலைப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நண்பர்களின் வட்டாரம் விரிவடையும். அரசு அதிகாரிகளால் ஆதாயம் அடைவீர்கள். பணிபுரியும் இடத்தில் சாதகமான சூழல் அமையும். பங்குதாரர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மறைமுக சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சிக்கல் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

கிருத்திகை : அனுபவம் வெளிப்படும்.
ரோகிணி : ஆதாயகரமான நாள்.
மிருகசீரிஷம் : வெற்றிகரமான நாள்.
---------------------------------------


மிதுனம்

ஜூன் 12, 2024


குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிக்கல்களால் ஏற்பட்ட தடைகள் விலகும். தேவையற்ற செலவுகளை குறைப்பீர்கள். எதிலும் புத்துணர்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். மனதிற்கு பிடித்த விதத்தில் சில பணிகளை முடிப்பீர்கள். சிறு வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மிருகசீரிஷம் : தடைகள் விலகும்.
திருவாதிரை : புத்துணர்ச்சியான நாள்.
புனர்பூசம் : லாபகரமான நாள்.
---------------------------------------


கடகம்

ஜூன் 12, 2024


குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். இழுபறியாக இருந்துவந்த வேலைகளை முடிப்பீர்கள். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : அமைதியான நாள்.
பூசம் :  மகிழ்ச்சியான நாள்.
ஆயில்யம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
---------------------------------------


சிம்மம்

ஜூன் 12, 2024


எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிலும் அவசரப்பட்டு செயல்படுவதை தவிர்க்கவும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். குழந்தைகளின் வழியில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மகம் : தாமதம் உண்டாகும்.
பூரம் : அனுசரித்துச் செல்லவும்.
உத்திரம் : மதிப்பளித்து செயல்படவும்.
---------------------------------------


கன்னி

ஜூன் 12, 2024


நினைத்த சில பணிகளில் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். உழைப்புக்கான மதிப்பு தாமதமாக கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் சற்று கவனம் வேண்டும். கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை :  மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீல நிறம்

உத்திரம் : அலைச்சல் ஏற்படும்.
அஸ்தம் : தாமதமாக கிடைக்கும்.
சித்திரை : ஏற்ற, இறக்கமான நாள்.
---------------------------------------


துலாம்

ஜூன் 12, 2024


குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். சமூகப் பணிகளில் ஒத்துழைப்பு  ஏற்படும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். மனதளவில் உற்சாகம் பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : லாபகரமான நாள்.
விசாகம் : உற்சாகம் பிறக்கும்.
---------------------------------------


விருச்சிகம்
ஜூன் 12, 2024


தடைபட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அலுவலகத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூகம் சார்ந்த புதிய கண்ணோட்டம் பிறக்கும். செயல்களில் அணுகுமுறைகளால் மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். செலவு குறையும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்

விசாகம் : ஆசைகள் நிறைவேறும்.
அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.
கேட்டை : மாற்றம் பிறக்கும்.
---------------------------------------


தனுசு

ஜூன் 12, 2024


வரவுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். புதிய விஷயங்களில் பொறுமை வேண்டும். மாணவர்களுக்கு பாடங்களில் சிறுசிறு குழப்பங்கள் தோன்றி மறையும். அரசு வழியில் சாதகமான சூழல் அமையும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தடையாக இருந்தவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீல நிறம்

மூலம் : தடைகள் விலகும்.
பூராடம் : சாதகமான நாள்.
உத்திராடம் :  புரிதல் ஏற்படும்.
---------------------------------------


மகரம்
ஜூன் 12, 2024


சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். மற்றவர்களை நம்பி இருக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. திட்டமிட்ட காரியங்களில் பொறுமையுடன் செயல்படவும். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். எதிர்பாராத சில செலவுகளால் கையிருப்பு குறையும். வேலையாட்களால் அலைச்சல் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை :  கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

உத்திராடம் : கவனம் வேண்டும்.
திருவோணம் : பொறுமையுடன் செயல்படவும்.
அவிட்டம் : அலைச்சல்கள் உண்டாகும்.
---------------------------------------


கும்பம்
ஜூன் 12, 2024


மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். சகோதரர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். வாகன பழுதுகளை சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் அமைதியான சூழல் அமையும். போட்டிகளில் எதிர்பாராத முடிவுகள் கிடைக்கும். கவலை மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அவிட்டம் : தன்னம்பிக்கை மேம்படும்.
சதயம் : சாதகமான நாள்.
பூரட்டாதி : முடிவுகள் பிறக்கும்.
---------------------------------------


மீனம்
ஜூன் 12, 2024


கனிவான பேச்சுக்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.  வழக்கு பிரச்சனைகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். நினைத்த பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவது நன்மையை ஏற்படுத்தும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : அனுகூலமான நாள்.
உத்திரட்டாதி : சூட்சுமங்களை அறிவீர்கள்.
ரேவதி : நன்மையான நாள்.
---------------------------------------