கோவில் அர்ச்சனை தட்டில் தேங்காய், வாழைப்பழம், எலுமிச்சை பழம் வைப்பது ஏன் ?

கோவில் அர்ச்சனை தட்டில் தேங்காய், வாழைப்பழம், எலுமிச்சை பழம் வைப்பது ஏன் ?
சிந்தியுங்கள்...
முன்னோர்கள் எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்.

1 தேங்காயின் நற்குணங்கள் ஏராளம். குடலில் உள்ள புண்கள் குணப்படுத்துவதும், உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்டாலை கொடுக்கிறது. எலும்புக்கு தேவையான எண்ணெய் உற்பத்தி செய்வதற்கும், நீண்ட நாள் வாழ்வதற்கு ஏற்ற பொருளாக பயன்படுகிறது. உடலில் நமக்கு எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்கும். இறைவனுங்கு படைக்கப்பட்ட பின், அதை வாங்கி கூறு போட்டு நாம் சாப்பிட்டு, மற்றவர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து உண்ண செய்தல் வேண்டும். அதை விட்டுவிட்டு செதர் தேங்காய் சாலையில் உடைத்து வீணடிக்க கூடாது.

2 இரண்டாவது வாழைப்பழம் :-
இது மிக சிறந்த பழம். புற்று நோயை கூட குணப்படுத்தும் வல்லமை கொண்டது. குடல், வயிற்றில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி சுத்தம் செய்யும் தனித்தன்மை வாய்ந்தது. உடலுக்கு உடனடியாக ஆற்றலை கொடுக்கும். இதையும் இறைவனுக்கு படைத்த பின் நானும், சுற்றத்தார், உறவினர், நண்பர்களுக்கு கொடுத்து உண்ண செய்யலாம். அவற்றில் ஊது பத்தி கொளுத்தி வைத்து வீணடிக்க வேண்டாம்.

3 மூன்றாவது எலுமிச்சை பழம் :-
அதுவும் சிறந்த பழம். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தண்ணீரில் பிழிந்து உப்பு அல்லது இனிப்பு போட்டு குடிக்கலாம். புத்துணர்ச்சியை கொடுக்கும். சுடுதண்ணீரில் சிறிது எலுமிச்சையை பிழிந்து குடிக்க தேவையில்லாத கழிவுகள் வெளியேறும். கொலஸ்டிரால் குறையும்.  பெரும்பாலும் அதை மக்கள் தொடுறதே இல்லை. அது காஞ்சி கருவாடு போல கிடக்கும். இல்லாவிட்டால் அதையும் கட் செய்து நாம வாகனத்திற்கு கீழே வைத்து நசுக்கி விடுவோம்.


4 நான்காவது வெற்றிலை
வெற்றிலை மிக மிக சிறந்த மருத்துவ பொருள். உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.  வைரஸ் தடுக்கக்கூடியது. அதனால் நம் முன்னோர்கள் கூட்டம் கூடும் திருமணம் மற்றும் துக்க இடங்களில் வெற்றிலை வைத்திருப்பார்கள். சாப்பாடு பின் 2 வெற்றிலை, 3 கிராம்பு, 5 மிளகு, சிறிது சர்க்கரை அல்லது தேன் வைத்து வெற்றிலை போடும் போது சளி இருமல் மற்றும் வைரஸ் குணமாகும். இதையும் நாம் மறந்து விட்டோம். மறக்கக்கூடாது என்பதற்காக தான் பூஜையில் வெற்றிலை இருக்கிறது.

5 ஐந்தாவது மஞ்சள்.
பெண்கள் கழுத்தில் அணிவதற்கு காரணமே அதன் மருத்துவ வலிமை தான். மஞ்சள் மருத்துவம் ஏராளம். உடலில் உள்ள புண்களை குணப்படுத்தும். உடம்பிற்கு கெடுதல் ஏற்படுத்தும் செல்களை அழிக்கும் சக்தியாக செயல்படுகிறது. புற்றுநோய் செல்களை தடுக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு.

சிந்தியுங்கள் தோழர்களே. அதன் பயன்பாடு, மருத்துவ குணங்கள் அறிந்து உண்ணுங்கள்...
மருத்துவ பொருள்களை வீணடிக்க வேண்டாம். அதே சமயத்தில் மருத்துவ பொருள்களை அளவாக பயன்படுத்துவது நல்லது. அளவுக்கு மீறினால் அமிர்தம் நஞ்சு என்பது நாம் அறிந்ததே