வசம்பைப் பயன்படுத்தி செய்யப்படும் தாந்திரீக பரிகாரங்கள்
வசம்பைப் பயன்படுத்தி செய்யப்படும் தாந்திரீக பரிகாரங்கள்
பணம் ஈர்ப்பு:
அந்தவகையில், பண வரவையும் ஈர்க்கும் சக்தி வசம்புக்கு உண்டு.. வசம்பு என்ற வாசனை மூலிகையை பரிகாரங்களுக்கு பயன்படுத்தலாம்.
ஒரு மண் பானையில் கல் உப்பை நிரப்பி, அதில், ஒரு துண்டு வசம்பு போட்டு, அதன்மீது உப்பைக் கொட்டி மூடிவிட வேண்டும்.
இந்த பாத்திரத்தில் 520 என்ற எண்ணை மேல்புறத்திலும், 741 என்று எண்ணை கீழ்புறத்திலும் எழுதி, இதனை யாரும் பார்க்காதவாறு, பூஜையறையில் சாமி படங்களுக்கு பின்புறம் மறைத்துவிட வேண்டும்.
மாதம் ஒருமுறை இந்த பானையை வெளியே எடுத்து, அதிலிருக்கும், உப்பு, வசம்பு இரண்டையும் எடுத்துவிட்டு, வேறு வசம்பு, உப்புவை மாற்றிவிட்டு, மறுபடியும் யார் கண்ணிலும் படாமல் வைக்க வேண்டும்.
இப்படி செய்துவரும்போது வீட்டில் பணம் தங்கு தடையின்றி வந்து கொண்டே இருக்கும்.
வசம்பு முடிச்சு
வசம்பு பொடியை ஒரு வெள்ளை நிறத் துணியில் போட்டு, பச்சை கற்பூரம் சிறிய துண்டு, ஏலக்காய் 2, கிராம்பு 2, சிறிது கல் உப்பு போன்றவற்றை வைத்து பச்சை நிற நூலால் சிறிய முடிச்சாக கட்டி கொள்ள வேண்டும்.
இந்த முடிச்சை பணப்பெட்டி, பீரோ போன்ற இடங்களில் வைக்கலாம். இதனால், உங்களிடமுள்ள பணம் பன்மடங்காகப் பெருகும்.
நகைப்பெட்டியில் வைக்கும்போது, நகைகள் வாங்கும் யோகமும் கூடும். குழந்தைகள் படிக்கக்கூடிய புத்தகங்கள் வைக்குமிடத்திலும் இந்த முடிச்சை வைக்கலாம்.
இதனால் குழந்தைகள் புத்திக்கூர்மையுடனும், நினைவுத்திறனுடனும் படிப்பார்கள்
வசம்பு தீபம்:
வசம்பு கொண்டு வசம்பு தீபம் ஏற்றுவதாலும் கடன் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
பெரிய அகல்விளக்கில் வேப்ப எண்ணெயை ஊற்றிக் கொண்டு, 6 நெல்லிக்காய் கொட்டை, 2 சிட்டிகை வசம்பு பொடியையும் சேர்க்க வேண்டும்.
பின்னர் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இப்படி தீபம் ஏற்றி வருவதால், வியாபாரத்தில் உள்ள தொல்லைகள் நீங்கி, நஷ்டங்களும் விலகும். எதிரிகளின் தொல்லையும் நீங்கும்.
ஒருவேளை எதிரிகளின் செய்வினை கோளாறுகள் இருந்தால், வேப்பெண்ணை தீபத்தில் நெல்லி கொட்டைகளுக்கு பதிலாக 9 வேப்பம் கொட்டைகளை சேர்ந்து தீபம் ஏற்ற வேண்டும். அல்லது மேற்கண்ட 2 பிரச்சனைகள் இருந்தால், 2 தீபத்தையும் தனித்தனியாக ஏற்றி பூஜை செய்யலாம்.
செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய தினங்களில் இந்த தீபத்தை ஏற்றுவது சிறந்த பலனை தரும். விளக்கேற்றும்போது, தென்மேற்கு திசையில் தீபம் ஏற்றிவைத்து தீபத்தின் முன்பு அமர்ந்து, தீப ஒளியின் மையத்தை பார்த்தவாறு மனதில் உள்ள பிரச்சனைகளை சொல்லி வேண்டி கொள்ளலாம்.
இந்த விளக்கில் உள்ள கொட்டைகளை மாதத்திற்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும்.