காலையில் எழுந்ததும் எதை பார்த்தால் அதிர்ஷ்டம்...

காலையில் எழுந்ததும் எதை பார்த்தால் அதிர்ஷ்டம்

காலையில் எழுந்ததும் நாம் கேட்கக்கூடிய விஷயமும், பார்க்கக்கூடிய விஷயமும் நல்லதாக இருந்தால், அந்த நாள் முழுவதும் நமக்கு பாசிட்டிவாக இருக்கும். அவ்வாறு நமக்கு பாசிட்டிவ் எனர்ஜி தரக்கூடிய விஷயங்களும், பொருட்களும் என்னவென்பதை இந்தப் பதிவில் காண்போம்.


1. உள்ளங்கை: காலையில் எழுந்ததும் முதலில் பார்க்க வேண்டியது உள்ளங்கை. நம்முடைய வாழ்க்கையில் நமக்கு தன்னம்பிக்கையும், உற்சாகமும் தரக்கூடியது உள்ளங்கையாகும். இதை பார்ப்பதனால் மிக பெரிய வெற்றியும், உற்சாகமும் கிடைக்கும். உள்ளங்கை மகாலட்சுயின் அம்சமாக கருதப்படுகிறது. உள்ளங்கையை பார்ப்பதால், பாசிட்டிவ் வைப்ரேஷன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

2. கண்ணாடி: முகம் பார்க்கும் கண்ணாடியை பார்க்கும்போது, நாம் சிரித்தால் அதுவும் சிரிக்கும். நாம் கோபப்பட்டால் அதுவும் கோபப்படும். அதுபோலதான் நாம் ஒருவருக்கு சிரிப்பை கொடுத்தால் அவர்களும் நமக்கு சிரிப்பை தருவார்கள். நாம் கோபப்பட்டால் அவர்களும் நம் மீது கோபப்படுவார்கள். நாம் ஒரு விஷயத்தை சிரித்த முகத்துடன் செய்ய வேண்டும் என்பதை கண்ணாடியின் மூலமாக கற்றுக்கொள்ளலாம். காலையில் எழுந்ததும் சிரித்த முகத்துடன் கண்ணாடியைப் பார்ப்பது, அந்த நாள் முழுவதும் பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கும்.

3. சூரிய உதயம்: வியாபாரம், தொழில் செய்யக்கூடியவர்கள், கிரியேட்டிவாக யோசிப்பவர்கள் இவர்களுக்கு அதிகாலையில் எழும் பழக்கம் இருக்கும். புதிதாக ஏதேனும் தொடங்க நினைப்பவர்கள் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுவது சிறந்தது. காலை சூரியனை பார்ப்பது நம் எண்ணங்களுக்கு நேர்மறையான அதிர்வுகளை கொடுக்கும்.

4. வானம்: காலையில் எழுந்ததும் வானத்தை பார்ப்பது சிறப்பாகும். மேகமூட்டங்களுடன் இருக்கும் வானம் மனதிற்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தரும். இதனால் நமக்கு நாள் முழுக்க மகிழ்ச்சியான மனநிலையை கொடுக்கும்.

5. வாசனைப் பொருட்கள்: வாசனை தரக்கூடிய பொருட்களான சந்தனம், பச்சை கற்பூரம், பூக்கள் இவற்றை காலையில் பார்க்கும்போது நல்ல பாசிட்டிவ் வைப்ரேஷன் நம் எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும் செல்லும் என்று சொல்லப்படுகிறது.

6. பசுக்கள்: நம்முடைய சாஸ்திரத்தில் பசுவை காமதேனுவுடன் ஒப்பிடுகிறார்கள். காலையில் பசுவையும் அதனுடன் சேர்த்து கன்றையும் பார்ப்பது, அனைத்து தேவர்களையும், மும்மூர்த்திகாளையும் ஒன்றாக பார்த்து தரிசிப்பதற்கு சமம் என்று சொல்லப்படுகிறது. இதனால், மிகப்பெரிய அதிர்ஷ்டம் மற்றும் முன்னேற்றம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.


7. கோயில் கோபுரம்: 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்று சொல்வார்கள். காலையில் எழுந்ததும் கோயில் கோபுரத்தை தரிசிப்பதும், குறிப்பாக கோயில் கலசத்தை தரிசிப்பதும் காலையிலேயே கோடி புண்ணியத்தை பெற்ற மனநிறைவை தரும். அதனால், அன்று நாம் செய்யக்கூடிய அனைத்து காரியமும் வெற்றியையும், மனநிறைவையும் தருவதாக அமையும் என்று சொல்லப்படுகிறது.🌸