நிலை வாசலுக்கு ஏற்ற சுவாமி படம்
நிலை வாசலுக்கு ஏற்ற சுவாமி படம்
ஒவ்வொரு வீட்டின் அமைப்பிற்கு ஏற்றபடி நிலை வாசலும் அமைத்திருப்பார்கள்.
அதில் கிழக்கு வாசல் முதலிடத்தில் இருக்கும். கிழக்கு பார்த்த வீடு அதிர்ஷ்டமிக்கதாக கருதப்படுகிறது.
நான்கு திசைகளில் அமைக்கப்பட்டு இருக்கும் நிலை வாசல்களுக்கு உரிய சுவாமி படங்களை மேற்புறத்தில் மாட்டி வைத்தால் வீட்டில் யோகங்கள் பல பெருகும் என்பது ஐதீகம்.
முதலாவதாக நாம் பார்க்க இருப்பது கிழக்கு வாசல். கிழக்கு வாசல் பொதுவாகவே அதிர்ஷ்டம் தரக்கூடிய அமைப்பாகும்.
ஒரு வீடு கிழக்கு பார்த்து அமைந்திருந்தாலே, அஷ்டலட்சுமிகளின் வரவும் வீட்டில் கிடைக்க பெறுவதாக நம்பப்படுகிறது.
மேலும் அவ்வீட்டின் நிலை வாசலின் வெளிப்புறத்தில் மேல் பக்கமாக அனைவரும் பார்க்கும் வண்ணம் செம்பு தகட்டினால் ஆன சூரிய பகவான் பதிக்க, சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கிழக்கு பார்த்த வீட்டில் மகிழ்ச்சி நிறைந்து இருக்க, தரித்திரம் இல்லாமல் சுறுசுறுப்பு இருக்க, சூரிய பகவானின் அருள் இந்த தகட்டின் மூலம் நிச்சயம் கிடைக்கும்.
இரண்டாவதாக நாம் பார்க்க இருப்பது மேற்கு பார்த்த வாசல். உங்கள் வீட்டின் நிலை வாசல் மேற்கு பார்த்தபடி அமைக்கப்பட்டு இருந்தால் நீங்கள் வாசலின் வெளிப்புறத்தில் மேல் பகுதியில் பஞ்சமுக ஆஞ்சநேயரின் திருவுருவத்தை பதிக்க வேண்டும்.
பஞ்சமுக ஆஞ்சநேயர் படத்தை அனைவரும் பார்க்கும் வண்ணம் அங்கு மாட்டி வைத்திருந்தால், சகல விதமான சௌபாக்கியங்களும், ஐஸ்வர்யங்களும் உண்டாகப் பெறும்.
மூன்றாவதாக நாம் பார்க்க இருப்பது வடக்கு பார்த்த வீடு. உங்கள் வீடு வடக்கு பார்த்த நிலை வாசலை கொண்டிருந்தால், நீங்கள் வெளிப்புறத்தில் மேற்பகுதியில் குபேரன் அல்லது லட்சுமி குபேரன் படத்தை மாட்டி வைத்தால் நல்ல யோகங்கள் கைக்கூடி வரும்.
குபேரனுடைய ஆசி உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும், எனவே வியாழன் கிழமை தோறும் நிலை வாசலுக்கு குபேர தீபம் ஏற்றி வைத்து வழிபட்டு வாருங்கள்.
வடக்கு செல்வ வளத்தை கொடுக்கக் கூடியது. வடக்கு குபேரனுக்கு உரிய திசையானது. கிழக்கு பார்த்த நிலை வாசலும், வடக்கு பார்த்த நிலை வாசலும் ஒரு குடும்பத்திற்கு சௌபாக்கியத்தை கொடுக்கக் கூடியது.
நான்காவதாக கடைசியாக நாம் பார்க்க இருப்பது தெற்கு பார்த்த வாசல். தெற்கு பார்த்த வாசல் வீடு வைத்திருப்பவர்கள் தட்சிணாமூர்த்தியின் திருவுருவப்படத்தை வைத்திருந்தால், குடும்பத்தில் ஞானம் பெருகும்.
வீட்டையும், வீட்டில் இருப்பவர்களையும் அணுகக் கூடிய விதமான தீய சக்திகளும், உள் நுழையாது தடுத்து காக்கும் அரனாக செயல்படக் கூடிய ஒரு அற்புதமான விஷயம் இது.
தட்சிணாமூர்த்தியின் அருள் இருக்க பதினாறு செல்வங்களும், ஈரேழு பிறவியிலும் தொடரும் என்பது நம்பிக்கை.
குரு தட்சிணாமூர்த்தி இருக்க அறிவிற்கும், ஆற்றலுக்கும் குறைவிருக்காது அவ்வீட்டில் இருப்பவர்கள் சகல விதமான கலைகளிலும் உயர்ந்தவர்களாக விளங்கக்கூடும் வாய்ப்புகளை பெறுவீர்கள்.
எனவே அந்தந்த திசைக்கு உரிய நிலை வாசலில் அந்தந்த தெய்வங்களை மாட்டி வையுங்கள், சகல விதமான சௌபாக்கியங்களையும் பெறலாம்.