தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் பாலா இயக்கததில், சூர்யா நடிக்க கமிட் ஆகி அவர் விலகியதால் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் தான் வணங்கான், மாற்றுத்திறனாளியான அருண் விஜய், கன்னியாகுமரியில், நிரந்தரமான வேலை எதுவும் இல்லாமல், கிடைத்த வேலைகளை செய்துகொண்டு தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். அதே சமயம் கோபக்காரரான இவர், அடிதடியில் ஈடுபட்டு வருகிறார்.
அருண்விஜய் அடிதடியில் ஈடுபட்டு வருவதால், அருகில் வசிப்பவர்கள் அவரை ஒரு ஆதவற்றோர் இலத்தில், வேலைக்கு சேர்த்துவிடுகின்றனர். அங்கு பார்வையாற்ற பெண்கள் குளிப்பதை 3 பேர் பார்க்கின்றனர். இதை பார்த்துவிட்ட அருண்விஜய், அவர்களை அடித்து உதைத்து இருவரை கொலை செய்துவிடுகிறார். ஒரு மட்டும் தப்பித்துவிட, அருண்விஜய் கொலை செய்ததற்காக கைது செய்யப்படுகிறார்.
போலீஸ் விசாரணையில் எதுவும் சொல்ல மறுக்கும் அருண் விஜய், அடுத்து என்ன செய்தார்? தப்பித்த அந்த ஒருவரின் நிலை என்ன? காவல்துறை இந்த வழக்கில் என்ன செய்தது என்பதே இந்த படத்தின் மீதிக்கதை. பாலா தனது வழக்கமான பாணியில், இருந்து சற்றும் விலகாமல், அதேபாணியிலான ஒரு படத்தை கொடுத்துள்ளார். குறிப்பாக அருண்விஜய் கேரக்டர் பிதாமகன் விக்ரம் கேரக்டரை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
சூர்யா விலகியதால், இந்த படத்தில் கமிட் ஆன அருண் விஜய், தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு, நடிப்பில் வித்தியாசத்தை காட்டியுள்ளார். அவரது சினிமா வாழ்க்கையில் வணங்கான் ஒரு முக்கியபடமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக அருண் விஜய் வாழ்ந்திருக்கிறார். அவரை போல், ரோஷ்னி பிரகாஷூம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேபோல் தங்கையாக நடித்துள்ள நடிகை ரிதா அண்ணனுக்காக உருகும்போது நம்மையும் சேர்த்து உருக வைக்கிறார். தனது அண்ணனிடம் சைகையில் பேசும்போது சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அண்ணன் தங்கை பாசத்தின் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பாலா அழுத்தமாக கூறியுள்ளார். பாடல்களில் ஜி.வி.பிரகாஷ், பின்னணி இசையில் சாம்.சி.எஸ். அசத்தியுள்ளனர்.
மொத்தத்தில், 6 வருட இடைவெளிக்கு பிறகு ஒரு படத்தை கொடுத்துள்ள இயக்குனர் பாலா அதை நேர்த்தியாகும், இன்றைய தினத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை அழுத்தமாகவும் சொல்லி, கவனம் ஈர்த்துள்ளார்.