சனியின் சடுகுடு
ஏழரை சனி ஒருவரின் ஆயுட்காலத்தில் மூன்று முறை பிடிக்கும்
முதல் சுற்று சனியை மங்கு சனி என்றும், இரண்டாவது சுற்று சனியை பொங்கு சனி என்றும், மூன்றாவது சுற்றை மாரக சனி என்று கூறுவோம்
என்ன தான் ஒருவர் ஜென்ம ஜாதகத்தில் சனி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், சனி தன் வீட்டை பார்த்தாலும், தன் வீட்டிற்குள் நுழைந்தாலும், நட்பு கிரகத்தோடு இணைந்தாலும் ஏழரை கால கட்டத்தில் சனியின் சுயரூபம் வெளிப்பட்டே தீரும்!?
ஏழரை மங்கு பொங்கு மாரகம் என்று பார்ப்பதில்லை
சனியை போன்ற வலுவான கிரஹம் இல்லை
ராஜ திசையான, குரு திசை மற்றும் ஒரு ஜாதகனுக்கு உச்ச கட்ட அதிர்ஷ்டம் மற்றும் வசதி வாய்ப்பை வாரி வழங்கும் சுக்கிர திசை இதுவெல்லாம் சற்று தன் பலத்தை இழந்தாலும், சனி மட்டும் தன் வீரியத்தை இழப்பதில்லை !?
சனி பிடித்தவர்களுக்கு சாப்பாட்டிற்கு பஞ்சமில்லை என்பார்கள். சனியில் மரணமில்லை என்பார்கள்
ஆனால் சனி எவ்வளவு புத்திசாலியையும் தவறான முடிவெடுக்க வைக்கும். எத்தனை வைரம் பாய்ந்த நெஞ்சத்தையும் கோழையாக்கும்
நெருங்கிய உறவுக்குள் துர்மரணத்தை ஏற்படுத்தும் பொருளாதார இழப்பு பொருள் களவு போதல், பணியிடத்தில் முட்டல் மோதல், உறவில் பகை, தீராத பிணி, இல்வாழ்வில் கசப்பு எவ்வளவோ கூறலாம்
*சனியின் *ருத்ரதாண்டவத்தை
பரிகாரம் செய்து, முழுமையாக எதையும் மாற்றிவிட இயலாது*ஆனால் கடுமையான பாதிப்பு இல்லாமல்*
குறைக்கலாம்
நமக்கென நிர்ணயிக்கப்பட்டது நடந்தே தீரும்
சனி நமக்கு வாழ்க்கை பாடம் நடத்தும் நம் ஆபத்து காலத்தில் நமக்கு உதவ ஓடி வரும் உண்மையான உறவு எது?
*என்று நமக்கு புரிய வைக்கும். நிறைய பிரயாணங்கள் மூலம் உலக அனுபவம் கொடுக்கும். எளிமையுயான வாழ்வை வாழ வைக்கும். பணத்தின் அருமையை புரிய வைக்கும். பல அரிய தத்துவங்களை சிந்திக்க வைக்கும். அடி மேல் அடி கொடுத்து
நம்மை மனதளவில் வலுவாக்கும்*
சனியை அதன் போக்கில் ஏற்று பழகுவோம்
இதுவும் கடந்து போகும் என்று பக்குவம் பெறுவோம்