மீண்டும் ரஜினி படத்தில் அனிருத்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்திற்கு இசையமைத்ததன் மூலம் அனிருத்தின் கனவு நிறைவேறியது.


தலைவர் படத்திற்கு இசையமைத்துவிட்டேனே என்று மகிழ்ச்சியில் இருந்த அனிருத்தை தேடி மேலும் ஒரு அரிய வாய்ப்பு வந்துள்ளது. அதாவது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கும் அனிருத் தான் இசையமைப்பாளர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது.

இந்த படத்திற்காக ரஜினி 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடித்து வரும் இந்தியன் 2 படத்திற்கும் அனிருத் தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத்துக்கு ஒரே நேரத்தில் ரஜினி, கமல் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.