ஈட்டி எறிதலில் நீரஜ் ஜோப்ரா சாதனை - 2020 ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்
“இந்திய விளையாட்டு வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நாள். என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நீரஜ் சோப்ரா. இந்தியாவின் 120 ஆண்டு காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி. நீங்கள் ஒரு பில்லியன் இதயங்களில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் உண்மையிலேயே ஒரு நேஷனல் ஹீரோ” என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தெரிவித்துள்ளார்.
“ தடைகளை தகர்த்து நீரஜ் சோப்ரா வரலாறு படைத்துள்ளதாக” குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
டோக்யோவில் புதிய வரலாறு எழுதப்பட்டிருக்கிறது, இன்றைய சாதனை என்றும் நினைவில் இருக்கும் என ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.6 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் அரசுப் பணி வழங்கப்படும் என்றும் ஹரியானா அரசு தெரிவித்துள்ளது.
ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் ஜோப்ரா, வரலாற்று சாதனை புரிந்துள்ளதாகவும், மில்கா சிங் கனவு நிறைவேறியதாகவும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்ச்சர் கிரண் ரிஜிஜூ ட்விட்டீயுள்ளார். ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்கு இது முதல் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.