ஸ்டாலின் அதிரடி - பட்ஜெட் கூட்டத்தொடர் - எம்எல்ஏக்களுக்கு பிரியாணி, கிஃப்ட் வழங்க தடை
2021-22ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் கடந்த 13-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, பட்ஜெட் உரை மீதான விவாதம் 4 நாட்களுக்கு நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் நடைபெறுகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவையில் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடுமையான விவாதங்கள் மற்றும் வெளிநடப்புகளை தாண்டி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் ஊழியர்கள், காவல்துறையினர், செயலக ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்காக வழங்கப்படும் மதிய உணவுகளுக்கு புகழ் பெற்றது.
பட்ஜெட் கூட்டத்தொடரின்போது எம்எல்ஏக்கள் பரிசுப் பொருட்களை எடுத்துச் செல்வது அல்லது ஒரு மாத கால பட்ஜெட் கூட்டத்தொடரில் மதிய உணவுக்கு ஆடம்பரமான பிரியாணி சாப்பிடுவது போன்ற நிகழ்வுகள் நடைபெறும். ஆனால் இந்த முறை சிக்கன நடவடிக்கையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நடைமுறையை கைவிடுமாறு துறை அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரிகிறது. எம்எல்ஏக்கள் தங்கள் சொந்த செலவில் உணவை ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தங்கள் துறைக்கான மானிய கோரிக்கையை நகர்த்தும் எம்எல்ஏக்களுக்கு அதிக விலையுர்ந்த பரிசுகள் அமைச்சரிடமிருந்து வழங்கப்படும். 1,000 க்கும் மேற்பட்டோருக்கு உணவளிக்க ஒவ்வொரு துறையும் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட மூன்று லட்சம் செலவழித்திருக்கும். மேலும் சேப்பாக்கம் விடுதியில் எம்எல்ஏக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்ட நிகழ்வுகளும் உள்ளன.
பட்ஜெட் விவாதத்தின் போது வழங்கப்படும் மதிய உணவுக்கான பட்ஜெட் ஏற்பாடுகள் எதுவும் இல்லை.
ஆனால் விலையுயர்ந்த உணவகங்களில் இருந்து வாங்கப்படும் உணவுகள் உறுப்பினர்களை மகிழ்ச்சியடைய செய்யும் துறைகள் அதன் செலவுகளை வெவ்வேறு தலைவர்களின் கணக்குக்கு கீழ் கொண்டு வரப்படுகின்றன. எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் தங்களது சொந்த ஏற்பாடுகளுடன் செயலக வளாகத்தில் உள்ள தங்கள் கட்சி அலுவலகங்களில் உணவு அருந்தினர்.
விலை உயர்ந்த சூட்கேஸ்கள் முதல் ட்ராலி பேக்குகள், கைக்கடிகாரங்கள் முதல் மின்னணு பொருட்கள், கைவினைப் பொருட்கள் ஆவின் பொருட்கள், மசாலா மற்றும் வனப் பொருட்கள், தினை அடிப்படையிலான பொருட்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகள் போன்றவை அமைச்சர்களால் எம்எல்ஏக்களுக்கு கொடுக்கப்படும். நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, துறை ஊழியர்களிடமிருந்து பரிசுகளைப் பெறுவார்கள் என முன்னாள் எம்எல்ஏக்கள் சிலர் கூறினர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகும், அமைச்சகங்களின் அன்றாட விவகாரங்களில் அமைச்சர்கள் செல்வாக்கு செலுத்தியபோது மதிய உணவு மற்றும் பரிசுகள் அதிகரித்ததாக சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன.