இந்தியாவில் எப்போது... எப்படி பார்ப்பது... சூரிய கிரகணம் 2021...
டிசம்பர் 4-ம் தேதி, முழு சூரிய கிரகணம். இது இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம். அண்டார்டிகாவில் இருந்து இது தெரியும். இந்த பிரபஞ்ச நிகழ்வு உலகின் வேறு சில பகுதிகளிலிருந்தும் தெரியும் என்று நாசா கூறுகிறது. தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் தெற்கு முனையில் வசிப்பவர்கள் இந்த கிரகணத்தின் பகுதியான கட்டங்களைக் காணலாம்.

இதுசம்பந்தமாக நாசா ஓர் ஊடாடும் வரைபடத்தை வெளியிட்டுள்ளது. இது பூமியின் மேற்பரப்பில் சூரிய கிரகணத்தின் பாதையைக் காட்டுகிறது. டிசம்பர் 4 கிரகணத்தை இந்தியாவிலிருந்து பார்க்க முடியாது. அக்டோபர் 25, 2022 அன்று ஒரு பகுதியாக சூரிய கிரகணத்தைக் காண்போம்.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது முழு சூரிய கிரகணம் தோன்றும். சூரியன் சந்திரனை விட தோராயமாக நானூறு மடங்கு பெரியது மற்றும் சந்திரனிலிருந்து 400 மடங்கு தொலைவில் உள்ளது. இது சூரியன் மற்றும் சந்திரன் இரண்டும் வட்டு அளவில் ஒரே மாதிரியாக இருப்பதால் கிரகணத்தை ஏற்படுத்துகிறது. இந்த முழு சூரிய கிரகணம் நவம்பர் 19-ம் தேதி பகுதி சந்திர கிரகணத்திற்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு வருகிறது.

சராசரியாக, சூரிய கிரகணம் ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் பூமியில் எங்காவது நிகழ்கிறது. ஆனால், அவை சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். டிசம்பர் 4 கிரகணத்தின் காலம் 1 மணி நேரம் 43 நிமிடங்கள்.

டிசம்பர் 4 அன்று தோன்றும் சூரிய கிரகணம் நிகழும் நேரம்

முழு கிரகணம் UTC காலை 7 மணிக்குத் தொடங்கும். அதிகபட்ச கிரகணம், காலை 7:33 மணிக்கு மற்றும் 08:06 மணிக்கு முடிவடையும். இந்திய நேரப்படி, இந்த கிரகணம் மதியம் 12.30 மணிக்குத் தொடங்கி, மதியம் 01.03 மணிக்கு உச்சம் பெற்று மதியம் 01.36 மணிக்கு முடிவடைகிறது.

சூரிய கிரகணத்தை இந்தியாவில் உள்ள அனைவரும் பார்க்க முடியாது. ஆனால், இந்த வான நிகழ்வை ஆன்லைனில் பார்க்கலாம். Timeanddate.com சூரிய கிரகணத்தின் நேரடி ஸ்ட்ரீம் இணைப்பை வெளியிடும். இதன் மூலம் நீங்கள் டிசம்பர் 4 அன்று இந்த நிகழ்வை ஆன்லைனில் பார்க்கலாம்.

சூரிய கிரகணம் 2021 டிசம்பர் 4 அன்று செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

*சூரிய கிரகணத்தை உங்கள் கண்களால் நேரடியாகப் பார்க்காதீர்கள்.

*கிரகணத்தைப் பார்க்க சாதாரண சன்கிளாஸ்கள் அல்லது டார்க் சன்கிளாஸ்களைப் பயன்படுத்தாதீர்கள்.

*கிரகணத்தைக் காண சிறப்பு சூரிய வடிப்பான்கள், கிரகண கண்ணாடிகள் அல்லது handheld solar viewers பயன்படுத்த வேண்டும். நீங்கள் இருண்ட ஆர்க்-வெல்டர்ஸ் கண்ணாடியையும் பயன்படுத்தலாம்.

*கிரகணத்தைப் படம்பிடிக்க பைனாகுலர்ஸ், தொலைநோக்கிகள், கேமராக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் போது, ​​லென்ஸில் பாதுகாப்பு சூரிய வடிப்பான்களை பயன்படுத்தவும்.

சூரிய கிரகணத்தைப் பார்க்க, பின்ஹோல் பெட்டியை உருவாக்குவது எப்படி?

ஒரு பின்ஹோல் ப்ரொஜெக்டர் சூரிய கிரகணத்தைப் பாதுகாப்பாகப் பார்க்க உதவும்.

*ஒரு செவ்வக நீளமான பெட்டியின் ஒரு பக்கத்தில் பின்ஹோலை குத்தவும் (ஒரு ஷூபாக்ஸ் போதும்).

*பெட்டியின் மறுமுனையின் உட்புறத்தில் ஒரு வெள்ளைத் தாளை ஒட்டவும்.

* காகிதத்தில் விழும் படத்தைப் பார்க்கப் பெட்டியின் அடிப்பகுதியில் ஒரு துளை இடுங்கள்.

*இப்போது, ​​உங்கள் முதுகு பகுதி சூரியனை நோக்கி நின்று, பெட்டியை உங்கள் தலைக்கு மேல் வைக்கவும். பின்ஹோல் பக்கம் சூரியனை நோக்கி இருக்க வேண்டும்.

*பெட்டியின் உள்ளே உள்ள காகிதத்தில் கிரகண சூரியனின் ப்ரொஜெக்ஷன் பார்க்கும் வரை உங்கள் நிலையை சரிசெய்து கொண்டே இருங்கள்.