வாட்ஸ்அப்பில் கான்ட்டாக்ட் சேமிக்காமல் மெசேஜ் அனுப்புவது எப்படி...
 சில சூழ்நிலைகளில், பயனர்கள் தொடர்பைச் சேமிக்காமல் ஒருவருடன் சாட் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் இதைச் செய்வது ஒரு சவாலாக இருக்கலாம். அனைவரும் உங்கள் தொடர்புகள் பட்டியலில் இருக்க வேண்டியதில்லை. சில சமயங்களில் உங்கள் முகவரிக்குப் பொருள்களை டெலிவரி செய்பவராக அவர் இருக்கலாம். இதுபோன்ற சமயங்களில் அவருடைய தொடர்பை சேமிக்கவேண்டிய அவசியம் இருக்காது. தொடர்பை சேமிக்காமல் வாட்ஸ்அப்பில் செய்திகள் அனுப்ப எளிதான வழி இங்கே உள்ளது.

பயனர்கள் இணைய பிரவுசர் வழியாக வாட்ஸ்அப்பின் கிளிக் டு சாட் அம்சத்தைப் பயன்படுத்துவதன் மூலம் எண்ணைச் சேமிக்காமலேயே சாட் செய்ய முடியும். க்ளிக் டு சாட் அம்சமானது, செயலில் உள்ள எந்தவொரு வாட்ஸ்அப் கணக்குடனும் உரையாடலைத் தொடங்க wa.me குறுக்குவழி இணைப்புகளைப் பயன்படுத்துகிறது.

எண்ணைச் சேமிக்காமல் வாட்ஸ்அப் சாட்டை தொடங்குவது எப்படி?

1. உங்களுக்கு விருப்பமான பிரவுசரை திறக்கவும்

2. https://wa.me/phonenumber என்ற முகவரியைப் பார்வையிடவும்.

குறிப்பு: நீங்கள் சாட் செய்ய விரும்பும் பதிவுசெய்யப்பட்ட வாட்ஸ்அப் மொபைல் எண்ணை ஃபோன் எண் புலத்தில் இந்த வடிவத்தில் https://wa.me/919734652818 சேர்க்கவும். இந்தியாவிற்கான 91 என்ற நாட்டின் குறியீடும் சேர்க்கப்பட வேண்டும்.

3. இந்தப் பக்கத்தைப் பார்வையிடும்போது, ​​பச்சை செய்தி பட்டன் உள்ள இணையதளத்திற்கு வாட்ஸ்அப் உங்களை வழிநடத்தும்.

4. நீங்கள் உள்ளிட்ட எண்ணுடன் சாட்டிங் பட்டனை கிளிக் செய்யவும்.

உங்கள் பட்டியலில் தொடர்பைச் சேமிக்க வேண்டிய அவசியமின்றி, ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் பதிவுசெய்யப்பட்ட வாட்ஸ்அப் எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப பயனர்கள் இந்தப் படிகளைப் பயன்படுத்தலாம்.

அதே செயல்பாட்டை வழங்க வடிவமைக்கப்பட்ட பல்வேறு பயன்பாடுகள் உள்ளன. WhatsDirect என்பது அதைப் பெறுவதற்குப் பயன்படுத்தக்கூடிய ஒரு பயன்பாடு. சாட் செய்தியுடன், பயனர்கள் உரையாடலைத் தொடங்க விரும்பும் தொலைபேசி எண்ணை உள்ளிட இந்த பயன்பாடு அனுமதிக்கிறது.