10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்... இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு...
இந்துசமய அறநிலையத்துறையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோயிலில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 13 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, திருச்சி மாவட்டம் மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலில், காலியாக உள்ள தட்டச்சர், கணினி இயக்குபவர், தொழில்நுட்ப உதவியாளர், துப்புரவு பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.12.2021க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
தட்டச்சர் (Typist)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,500 – 58,500
கணினி இயக்குனர் (Computer operator)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : கணினி அறிவியலில் பட்டயப்படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தெரிந்திருப்பது அவசியம்.
சம்பளம் : ரூ. 20,600 – 65,500
தொழில்நுட்ப உதவியாளர் – சிவில் (Techinical Assistant – Civil)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : கட்டடப் பொறியியல் (Diploma in civil) பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 20,600 – 65,500
தூய்மைப் பணியாளர் (Sweeper)
காலியிடங்களின் எண்ணிக்கை : 10
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 10,000 – 31,500
வயதுத் தகுதி : 01.07.2021 அன்று 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில் அலுவலகத்தில் வழங்கப்படும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 620002.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.12.2021