மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் இந்தியாவின் ஹர்னாஸ்
பஞ்சாபைச் சேர்ந்த 21 வயதான இந்திய அழகி ஹர்னாஸ் கவுர் சந்து பிரபஞ்ச அழகி பட்டம் வென்றுள்ளார். இஸ்ரேலின் ஈலாட் நகரில் நேற்று (12.12.2021) பிரபஞ்ச அழகிகளுக்கான போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பஞ்சாபைச் சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சந்து பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளார்.


பிரபஞ்ச அழகி போட்டியில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பட்டம் பெற்றுள்ளார். இதற்கு முன்பு கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த லாரா தத்தா இப்பட்டத்தை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது .