நெட்ஃபிளிக்ஸ் இந்தியா விலைக் குறைப்பு...
தமிழகத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் சனிக்கிழமையே தடுப்பூசி முகாம் நடைபெறும் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் தடுப்பூசி முகாம் இனி சனிக்கிழமைகளில் நடத்தப்படும்.
கொரோனா மூன்றாம் அலை வேகமாக பரவி வருவதால், பல மாநிலங்கள் இரவு ஊரடங்கு, வார ஊரடங்கு என சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுவும் குறிப்பாக சென்னையில் பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனாவுடன் ஒமைக்ரான் பரவலும் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, இன்று காலை தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் குறித்தும், அடுத்தக்கட்ட தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.