தமிழக அரசின் மீன்வளத்துறையில் 600 பணியிடங்கள்... டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...
தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் 600 சாகர் மித்ரா பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12.01.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 600

கல்வித் தகுதி : இளங்கலை மீன்வள அறிவியல்/கடல் உயிரியியல்/விலங்கியல்/தகவல் தொழில்நுட்பம் (Bachelor degree in Fisheries Science/Marine Biology/Zoology/ Information Technology (IT))

வயதுத் தகுதி : 01.07.2021 அன்று 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ.10,000 + 5,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/Sagar_Mitra_-_Notification.pdf என்ற இணையதளத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்ப படிவத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட கடற்கரையோர மாவட்டங்களின் இணை இயக்குனர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.01.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/Sagar_Mitra_-_Notification.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.