விஷ்ணு புராணம் - பகுதி 106... பாரிஜாத அபஹரணம்... பாரிஜாத மரமும், மலரும்...
விஷ்ணு புராணம் - பகுதி 106

பாரிஜாத அபஹரணம்
=================
பாரிஜாத மரமும், மலரும்
========================

ஒரு சமயம் தேவலோகம் சென்றிருந்த நாரதருக்கு தேவேந்திரன் ஒரு பாரிஜாத மலரைக் கொடுக்க, அதை அவர் எடுத்து வந்து கிருஷ்ணனிடம் தர, அதனைக் கிருஷ்ணன் தன் கையாலேயே ருக்மிணிக்குத் தலையில் சூட்டினார். அடுத்து சத்தியபாமையின் இல்லாம் சேர்ந்த நாரதர் பாமாவிடம் நடந்தவற்றைக் கூறி அவள் மனதில் அசூயையை உண்டாக்கினார். சற்று நேரம் கழித்து பாமாவின் இல்லம் வந்த கிருஷ்ணனை பாமா தக்கமுறையில் வரவேற்காமல் அழுதவண்ணம் கோபமாகப் படுத்திருந்தாள். அவளைச் சமாதானப்படுத்தி எழுப்பி காரணத்தை அறிந்துகொண்டு பாமாவின் இல்லத்திற்கு பாரிஜாத மரத்தையை கொண்டு வந்து தருவதாக வாக்களித்தார். நரகாசூரன் வதத்திற்குப் பின் இந்திரனுக்கு உதவிய கிருஷ்ணன் இந்திரனிடம் பாரிஜாத மரத்தைக் கேட்டுப் பெற்றுவர நாரதரை அனுப்ப, அவன் மறுத்திட இந்திரனுக்கும் கிருஷ்ணனுக்கும் மரத்துக்காக போர் நிகழ்ந்தது. காசிப முனிவர் அறிவுரைப்படி பாரிஜாத மரத்தைத் துவாரகைக்கு அனுப்பி வைத்தான் இந்திரன். மரம் பாமாவிற்குக் கிடைத்தது பற்றி மனமகிழ்ந்த அவள் மலர்கள் அருகே உள்ள ருக்மிணி வீட்டில் குவிவது பற்றி திரும்பவும் கோபம் கொண்டாள். ருக்மணி மீது பொறாமையும் ஏற்பட்டது.

மறுநாள் கிருஷ்ணன் பாமாவுடன் ருக்மிணியின் வீட்டிற்குச் சென்றார். ருக்மிணி அகமகிழ்ந்து வரவேற்றாள். ருக்மணி உள்ளே சென்று தொடுத்து வைத்திருந்த பாரிஜாத மலர் மாலையை எடுத்து வந்து கிருஷ்ணனுக்குச் சூட்டி மகிழ்ந்தாள். அப்போது கிருஷ்ணன் ருக்மிணியிடம் எல்லா மலர்களையும் எனக்கே சூட்டிவிட்டாயே? உனக்கு எங்கே? என்று கேட்டார். அதற்கு ருக்மிணி என்னையே பகவானுக்கு அர்ப்பணித்தவிட்ட பிறகு எனக்கென்று வேறு எதற்கு? பகவான் மகிழ்ச்சியே எனக்கு நிறைவைத் தருகிறது என்றாள். இதைக் கேட்டு சத்தியபாமா வெட்கித் தலை குனிந்தாள். பாமா மலரைத் தானே சூடி மகிழ நினைத்தாள். மலர் கிடைப்பது அரிதாயிற்று. அதனை பகவானுக்கே அர்ப்பித்தாள் ருக்மிணி. எனவே தான் முயற்சி இல்லாமலேயே மலர் ருக்மிணிக்குக் கிடைத்தது. பாமா முயன்றும் அவளால் பெற முடியவில்லை. அப்போது சத்தியபாமா தன்னை மன்னித்து விடுமாறு வேண்டி கிருஷ்ணன் பாதங்களில் விழுந்து வணங்கினாள். பாமாவின் மனத்தில் இருந்த துவேஷம் நீங்கியது பற்றி மகிழ்ச்சியைத் தெரிவித்தார் கண்ணன். அன்று முதல் தன் வீட்டில் விழும் பாரிஜாத மலர்களைப் பறித்து ருக்மிணிக்குக் கொடுத்து வந்தாள்.

ஒருநாள் நாரதர் சத்தியபாமாவின் இல்லத்திற்கு வர பாமா அவரை வரவேற்று, வணங்கி கண்ணனின் அன்பு காரணமாக பாரிஜாத மரம் கிடைத்தது என்று கூறி மலர்களைக் கொண்டு அவர் பாதங்களில் அர்ச்சித்தாள். அப்போது நாரதர் பாமாவை பாக்கியவதி என்றும் அவள் முற்பிறவியில் செய்த புண்ணியத்தினால் கிருஷ்ணனைப் பெற்று இருப்பதாகவும் கூறினார். பாமா முற்பிறவியில் கார்த்திகை ஏகாதசி விரதம் இருந்து, துளசிச் செடியை வைத்து வளர்த்து வழிபட்டு வந்ததன் பலனாகவே இப்பிறவியில் பகவானை அடைந்திருப்பதாகவும் கூறினார். பாரிஜாத மரமும் அதனாலேயே கிடைத்தது. கணவன் அன்பு நிலைத்திருக்க துலாபாரம் போட்டுத் தானம் செய்வாயாக என்று நாரதர் பாமாவுக்கு அறிவுறுத்தினார். அப்போது பாமா அந்தத் துலாபார தான விவரம் பற்றி கேட்க, நாரதர் அது பற்றி தெரிவித்தார்.
கிருஷ்ணனை ஒரு தராசுத் தட்டில் அமர்த்தி அவர் எடைக்குப் பொன் வைத்து அதனைத் தானம் செய்தால் அப்படி செய்பவரை விட்டுப் பிரியாமல் கிருஷ்ணன் இருப்பார் என்று கூற, சத்தியபாமா அதற்கான முயற்சியில் ஈடுபட்டாள். மேலும் அந்தத் தானத்தைப் பெரும் தகுதி நாரதருக்கே எனவும் பிரார்த்தித்தாள். இதில் நாரதர் சூழ்ச்சியை அவள் அறியவில்லை. குறிப்பிட்ட நாளில் தராசுத் தட்டில் பகவானை அமர வைத்து, அவர் எடைக்கு பொன்னை மற்றொரு தட்டில் வைக்குமாறு தனது பணிப்பெண்களுக்கு ஆணை இட்டாள். அவள் மனதில் கிருஷ்ணன் எடைக்கு மேல் பொருள் இருப்பதாகக் கர்வம் இருந்தது. அப்போது நாரதர் சூழ்ச்சியால் எவ்வளவு பொன்னை வைத்தும் கிருஷ்ணன் எடைக்கு அவை சரியாக இல்லை. என்ன செய்வதென்று அறியாமல் விழிக்க, மற்ற கிருஷ்ண பத்தினிகள் அவளையும், அவள் துலாபாரம் செய்ய முற்பட்டதையும் பற்றி ஏசலாயினர். கடைசியில் ருக்மிணியால் ஏதாவது செய்ய முடியுமா என்று எல்லாரும் எண்ணி சத்தியபாமாவை ருக்மிணியிடம் சென்று வேண்டிக்கொள்ளுமாறு சொல்ல வேறு வழியின்றி சத்தியபாமா ருக்மிணியைப் பிரார்த்தித்தாள். உடனே ருக்மிணி அங்கு வந்து தட்டில் உள்ள பொருள்களை எல்லாம் அகற்றுமாறு கூறி கிருஷ்ணனை முழு மனதுடன் தியானித்து அவன் அருள் வேண்டி துளசி தளங்களை அத்தட்டில் வைக்க தட்டிரண்டும் சமமாயிற்று. தவறை உணர்ந்த பாமா தலை குனிந்தாள். அப்போது நாரதர், எந்தப் பக்தையின் பக்தியினாலும், செயலினாலும் துலாபாரம் நிறைவேறியதோ அவருக்கே கிருஷ்ணன் சொந்தம் என்றார்கள்
"ஸ்ரீ கிருஷ்ணன் தேவலோகத்திற்குச் சென்று சுவர்க்கத்தையடைந்ததும் அதன் வாயிலில் நின்று, தமது திருச்சங்கை ஊதினார். அந்தச் சங்கநாதத்தைக் கேட்டதும் அமரர்கள் அனைவரும் அர்க்கியத்தைக் கையிலேந்தி அவரை வரவேற்று திருவடி தொழுது உபசரித்தனர். பிறகு கருடத்துவஜன் தேவ மாதாவின் திருமாளிகைக்கு விஜயம் செய்தார். இந்திரனுடன் அதிதியைத் தொழுது, நரகாசுரனை வதைத்த தகவலை ஸ்ரீ கிருஷ்ணன் சொன்னார். லோக கர்த்தாவான அந்தப் பகவானை இந்திரனின் தாயான அதிதி மிகவும் பக்தியோடு துதித்தாள். தாமரைக் கண்ணா! அடியார்க்கு அபயமளிக்கும் அண்ணலே உனக்குத் தண்டம் சமர்ப்பிக்கின்றேன் மனம் புத்தி இந்திரியம் இவற்றுக்குக் கர்த்தாவே! ஞானியரின் இதயத்தில் இருப்பவனே! சீதோஷ்ணாதி உபாதையில்லாதவனே! சொப்பனம் முதலிய அவஸ்தைகளற்றவனே! பரமார்த்தம் தெரியாமல் மோகம் செய்யும் மாயை உன்னுடையது! அதனால்தான் மூடன் ஆன்மாவல்லாததை ஆன்மாவென்று நினைத்துப் பந்திக்கப்படுகிறான். உலகத்தார் உன்னை ஆராதித்து புத்திராதிகளான இஷ்டங்களை வேண்டுகிறார்களேயல்லாமல், தங்களுக்கு நேர்ந்துள்ள சம்சாரத்துக்கு நாசத்தை வேண்டாமல் இருக்கிறார்கள் என்றால் அது உன் மாயையேயாம்! இதற்கு ஓர் உதாரணம் பார் நான் உன்னை என் புத்திரனுக்காகவும் சத்துரு நாசத்துக்காகவுமே ஆராதித்தேனே தவிர மோட்சத்துக்காக அல்ல. இதுவும் உன் மாயைதான்! எதுவும் தரவல்ல கற்பக விருட்சத்திடம் ஒருவன் சென்று, தனக்குக் கோவணம் தரவேண்டுமென பிரார்த்தித்தான் என்றால் அது அவன் குற்றமேயாகும். கற்பக மரத்தின் குற்றமாகாது. நீயே, ஞானம் போன்றுள்ள அஞ்ஞானத்தை அழிக்கவேண்டும். ஓ பகவானே! நான் உனக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன்! ஸ்தூலமான உனது ரூபத்தைக்காண்கிறேனேயன்றிச் சூஷ்மமான ரூபத்தைக் காணவில்லையே! ஆகிலும் எனக்காக அனுக்கிரகித்து அருள்செய்ய வேண்டுகிறேன் என்றாள். அதிதியினால் துதிக்கப்பட்ட ஸ்ரீபகவான், அந்த தேவ மாதாவை நோக்கி, புன்னகையுடன் அம்மா! நீ எங்களுக்குத்தாய் ஆகையால் நீ தான் எங்களுக்கு அனுக்கிரகஞ் செய்ய வேண்டும்! என்றார்."

"அதைக்கேட்ட அதிதி உன் திருவுள்ளம் அப்படியானால், அப்படியே ஆகட்டும் நானும் வரம் தருகிறேன். நீ பூவுலகிலும் சுரராலும் அசுரராலும் வெல்லக்கூடாதவன் ஆகக்கடவாய்! என்று மங்களாசாசனம் செய்தாள்.
பிறகு சத்தியபாமையும் தேவமாதாவான அதிதியை வணங்கி, அம்மா! நின்னை அனுக்கிரகித்து அருளவேண்டும் என்றாள். ஓ பெருமாட்டியே! உனக்கு மூப்பாகிலும் ரூபமாறுதலாகிலும் உண்டாகாதிருக்கக் கடவன! இந்த இளமையே உனக்கு நிலைத்து, எப்போதும் குற்றமற்றத் திருமேனியையுடையவளாய் இருப்பாயாக! என்று மங்களாசாசனம் செய்து இந்திரனுக்கும் கட்டளையிட அவனும் கண்ணனைப் பூசித்தான். இந்திரன் மனைவியான சசிதேவி சத்தியபாமைக்குப் பலவித உபசாரங்களைச் செய்தாள். ஆயினும் பாரிஜாத மலர்களைத் தான் சூடிக்கொண்டாளேயன்றி சத்தியபாமைக்கு வழங்கவில்லை. ஏனென்றால் அவள் சத்தியபாமையை மானிடப் பெண் என்றும் தேவருக்கே உரிய பாரிஜாதம் அவளுக்குத் தகாதது என்றும் நினைத்து விட்டாள்."

"மைத்ரேயரே! இவ்விதமாக இந்திராணி இந்திரனைத் தூண்டிவிட்டதும், அவன் பாரிஜாதத்திற்காகச் சகல தேவ சைன்னியங்களுடன் சாக்ஷத் பகவானோடு போர் செய்ய வந்தான். வஜ்ராயுதத்தை ஏந்திய இந்திரனின் தலைமையில், வானவர்கள் இரும்புத்தடி, கத்தி சூலம் முதலிய ஆயுதங்களை ஏந்தி வந்தனர். இந்திரன் ஐராவதத்தின் மேலேறி வந்தான். அதைக் கண்ட கண்ணன் திசைகள் யாவும் அதிரும்படி, சங்கத்வனி செய்து ஆயிரம் ஆயிரம் பாணங்களை வர்ஷித்தார். தேவேந்திரன் ஸ்ரீகிருஷ்ணன் இரு தரப்பினரிடையில் நெடுநேரம் போர் நிகழலாயிற்று. தேவேந்திரனின் தரப்பில் வருணதேவன் தன் பாசத்தை பிரயோகித்தான். கண்ணன் தரப்பில் கருடன் சிறிய பாம்பைத் துண்டிப்பது போல தனது மூக்கினாலே துண்டித்துவிட்டார். யமன் கால தண்டத்தை எறிந்தான். மதுசூதனன் அதைத் தமது கதாயுதத்தால் கீழே தள்ளினார். குபேரன் சிபிகை என்ற ஆயுதத்தை வீச அதைத் திருவாழியினாலே கண்ணன் பொடியாக்கினார். சூரியனைத் தனது திருக்கண் ஒளியாலே ஒளியற்றவனாக்கி, அக்கினியையும் குளிர்ந்துவிடச் செய்தார். வசுக்களைச் சிதற வடித்தார். உருத்திரர்களைச் சக்ராயுதத்தால் சூலங்களை முறித்துத் தரையில் படுக்கச் செய்தார். கந்தர்வர், வசுவர், முதலியோர் இலவம் பஞ்சு போலப் பறந்தனர். மதுசூதனனும் தேவேந்திரனும் அம்புகளை மழை பொழிவது போல் பொழிந்தனர். அப்போது ஐராவதத்தோடு கருத்துமான் போரிட்டார். போரில் யாவும் ஒழிந்தன. இந்திரன் தன் வஜ்ராயுதத்தை எடுத்தான். கண்ணன் சுதர்சனத்தை கையில் எடுத்தார். இருவரையும் இந்நிலையில் எதிர் எதிராகக் கண்ட சர்வ லோகமும் நடுங்கின. இப்படியிருக்க, இந்திரன் வஜ்ராயுதத்தை எம்பெருமான் மீது பிரயோகித்தான். கண்ணனோ, அதைத் தம் கையால் பிடித்துக்கொண்டு, தம் சக்ராயுதத்தைப் பிரயோகிக்காமல், இந்திரா! நில் என்றார்."

"உடனே ஸ்ரீ கிருஷ்ணன் அந்த மரத்தை அடியோடு பெயர்த்து பெரிய திருவடியான கருடனின் திருத்தோள் மீது வைத்தார். அப்போது அந்த வனத்துக் காவற்காரர்கள் ஓடி வந்து, கிருஷ்ணா! இந்திரனது பட்டத்து ராணியான சசிதேவியின் உரிமையான பாரிஜாதத்தை நீ கொண்டு போகாதது! இது உண்டான போதே யாவரும் இதை தேவராஜனுக்குக் கொடுத்துவிட்டார்கள். அவரோ, தமது காதலியான சசிக்குக் கொடுத்தார். அவளது அலங்காரத்துக்காகவே அமுதங் கடைந்தபோது தேவர்கள் இந்தப் பாரிஜாத மரத்தை உண்டாக்கினார்கள். அத்தகைய மரத்தை நீ கொண்டுபோனால் ÷க்ஷமமாய் உன் ஊர் போய்ச் சேரமாட்டாய். எந்தப் பிரிய நாயகியின் முகத்தைப் பார்த்து தேவராஜன் சகல காரியங்களையும் செய்கிறானோ, அத்தகைய தேவநாயகியான சசிதேவியின் பிரியத்துக்குப் பாத்திரமான இந்தப் பாரிஜாத மரத்தை நீ மூடத்தனமாக விரும்புகிறாய். இதை அறிந்தால் இந்திரன் வஜ்ராயுதத்தால் உன்னையே எதிர்த்துப்போர் செய்வான். அவனையே சகல தேவர்களும் பின்தொடர்வார்கள். நீ இதற்காக தேவர்களனைவரோடும் போரிட வேண்டியிருக்கும். ஆகையால் புத்திசாலிகள் கேட்டை விளைவிக்கும் காரியத்தில் பிரவேசிக்க மாட்டார்கள்! என்றார்கள்.
அதைக்கேட்டதும் சத்தியபாமைக்கு கோபம் பொங்கியது. அவள் அவர்களை நோக்கி, காவற்காரர்களே! இந்த மரத்துக்கு இந்திரன் யார்? சசி யார்? இது அமிர்தம் கடையும் போது கிடைத்தது என்றால், இது எல்லோருக்கும் பொதுவாக அல்லவோ இருக்கவேண்டும்? அப்படியிருக்க இந்திரன் ஒருவனே எப்படிக் கைகொள்ளலாம்? திருப்பாற் கடலில் பிறந்த அமுதம், சந்திரன், காமதேனு முதலியவை எப்படி யாவருக்கும் பொதுவோ அப்படியே இந்தப் பாரி நாதமும் எல்லோருக்கும் பொதுவாக வேண்டுமேயன்றி இந்திரனுக்கு மட்டுமே எப்படி உரிமையாகலாம்? ஆனால் இந்திராணி தன் கணவன் புஜபலத்தைப் பற்றிய கர்வத்தால் இதை எடுத்துக்கொண்டு போகக் கூடாது என்று தடுக்கிறாள். நல்லது. இப்போது இதை சத்தியபாமை தான் எடுப்பித்தாள் என்று அவளிடம் போய்ச் சொல்லுங்கள். நீங்கள் சிக்கிரம் சென்று இந்திராணியிடம் நீ உன் புருஷனுக்குப் பிரியமானவளாக இருந்து, அவன் உனக்கு வசப்பட்டவனாக இருந்தால், என்கணவன் இதை எடுத்துக்கொண்டு போவதை நிறுத்திவிடு பார்க்கலாம்! உன் கணவன் இந்திரன் தேவர்களுக்கு அரசன் என்பதை நான் அறிவேன். அறிந்துதான் மனித மங்கையாக இருக்கும் நான் உன்னுடையது என்று சொல்லப்படும். இந்த மரத்தை எடுப்பித்தேன், என்று கண்ணன் மனைவி சத்தியபாமை கர்வத்தோடு சொன்னாள் என்று நான் சொன்னவற்றை, அப்படியே தேவராணிக்குச் சொல்லுங்கள் என்றாள். காவலர்களும் ஓடிச் சென்று அப்படியே இந்திராணி சசிதேவியிடம் சொன்னார்கள். உடனே இந்திராணி தன் கணவனான இந்திரனைத் தூண்டி விட்டாள்."

"மைத்ரேயரே! இவ்விதமாக இந்திராணி இந்திரனைத் தூண்டிவிட்டதும், அவன் பாரிஜாதத்திற்காகச் சகல தேவ சைன்னியங்களுடன் சாக்ஷத் பகவானோடு போர் செய்ய வந்தான். வஜ்ராயுதத்தை ஏந்திய இந்திரனின் தலைமையில், வானவர்கள் இரும்புத்தடி, கத்தி சூலம் முதலிய ஆயுதங்களை ஏந்தி வந்தனர். இந்திரன் ஐராவதத்தின் மேலேறி வந்தான். அதைக் கண்ட கண்ணன் திசைகள் யாவும் அதிரும்படி, சங்கத்வனி செய்து ஆயிரம் ஆயிரம் பாணங்களை வர்ஷித்தார். தேவேந்திரன் ஸ்ரீகிருஷ்ணன் இரு தரப்பினரிடையில் நெடுநேரம் போர் நிகழலாயிற்று. தேவேந்திரனின் தரப்பில் வருணதேவன் தன் பாசத்தை பிரயோகித்தான். கண்ணன் தரப்பில் கருடன் சிறிய பாம்பைத் துண்டிப்பது போல தனது மூக்கினாலே துண்டித்துவிட்டார். யமன் கால தண்டத்தை எறிந்தான். மதுசூதனன் அதைத் தமது கதாயுதத்தால் கீழே தள்ளினார். குபேரன் சிபிகை என்ற ஆயுதத்தை வீச அதைத் திருவாழியினாலே கண்ணன் பொடியாக்கினார். சூரியனைத் தனது திருக்கண் ஒளியாலே ஒளியற்றவனாக்கி, அக்கினியையும் குளிர்ந்துவிடச் செய்தார். வசுக்களைச் சிதற வடித்தார். உருத்திரர்களைச் சக்ராயுதத்தால் சூலங்களை முறித்துத் தரையில் படுக்கச் செய்தார். கந்தர்வர், வசுவர், முதலியோர் இலவம் பஞ்சு போலப் பறந்தனர். மதுசூதனனும் தேவேந்திரனும் அம்புகளை மழை பொழிவது போல் பொழிந்தனர். அப்போது ஐராவதத்தோடு கருத்துமான் போரிட்டார். போரில் யாவும் ஒழிந்தன. இந்திரன் தன் வஜ்ராயுதத்தை எடுத்தான். கண்ணன் சுதர்சனத்தை கையில் எடுத்தார். இருவரையும் இந்நிலையில் எதிர் எதிராகக் கண்ட சர்வ லோகமும் நடுங்கின. இப்படியிருக்க, இந்திரன் வஜ்ராயுதத்தை எம்பெருமான் மீது பிரயோகித்தான். கண்ணனோ, அதைத் தம் கையால் பிடித்துக்கொண்டு, தம் சக்ராயுதத்தைப் பிரயோகிக்காமல், இந்திரா! நில் என்றார்.

"வஜ்ராயுதத்தை இழந்த இந்திரன் ஓடிப்போக முயன்றான். கருடனால் சிதைக்கப்பட்ட ஐராவதம் சோர்வுற்றதால் ஓடவும் முடியாமல் அவன் மேலும் தவித்தான். அப்போது சத்தியபாமை அவனை நோக்கி, இந்திரா! நீ மூவுலகுக்கும் அதிபதி. சசியின் கணவன்! நீ ஓடுவது தகுதியற்ற செயல் உன் மனைவி பாரிஜாத மாலைகளை ஏராளமாக அணிந்து, உன்னைப் பணிவாளல்லவா? வாசவா! உன்னுடைய கர்வியான பத்தினி முன்போல் இனி பாரிஜாத மலரோடு உன்னிடம் அன்போடு பார்க்க முடியாதபோது உன்னுடைய தேவ ஆட்சி எதற்குப் பயன்படும், இந்திரா, நீ வருந்தியது போதும். வெட்கப்படாதே! பாரிஜாதத்தைக் கொண்டுபோ, இதற்காகத் தேவர்கள் வருந்த வேண்டாம். அந்த சசி, தன் கணவன் தேவர்களுக்கே அரசன் என்ற கர்வத்தால், தன் மாளிகைக்கு வந்த என்னை மதிக்கவில்லை. அது பற்றிப் பெண்மையால் ஆழ்ந்திராத சித்தமுடைய நான், என் கணவரின் மகிமையைக் கொண்டாடி, உன்னோடு போர் செய்யச் செய்தேன். பாரிஜாதத்திற்காக நான் என் கணவரைத் தூண்டவில்லை. அதற்காக போருக்குத் தூண்டவும் இல்லை. பிறர் பொருளை நான் அபகரித்தது போதும். பாரி ஜாதத்தை நீயே கொண்டுபோ! புருஷனது பெருமையைப் பற்றிக் கர்வப்படாத பெண்ணே உலகத்தில் இல்லை. ஆனால் சசியோ, அதற்காக மட்டும் கர்விக்கவில்லை. ரூபத்தாலும் மிகவும் கர்வமுடையவளாக இருக்கிறாள்! என்றாள். அதைக்கேட்டதும் இந்திரன் ஓடாமல் நின்று சத்திய பாமையை நோக்கி, கொடியவளே! இஷ்டனுக்குத் துக்கமுண்டாகும்படி ஏன் பேசுகிறாய்? எவன் எல்லாவற்றுக்கும் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹார கர்த்தாவாக இருக்கிறானோ, அத்தகைய பகவானால் ஜெயிக்கப்பட்ட எனக்கு ஏன் வெட்கம் உண்டாகிறது? சூட்சுமத்துக்கும் சூட்சுமமாய், சகலவற்றிற்கும் பிறப்பிடமாய் இருக்கும் எவனுடைய சொரூபம் சகல வேத சாஸ்திரங்களையும் அறிந்தோருக்கன்றி, மற்றவர்களால் அறியப்படாமல் இருக்கிறதோ, எவன் ஒருவராலும் ஆக்கப்படாமல் தானே ஈஸ்வரனாய், அஜனாய், நித்தியனாய், தனது திருவுள்ளத்தால் உலக நன்மை கருதி மனுஷ்ய அவதாரஞ் செய்திருக்கிறானோ அந்தப் பகவானை வெல்லும் வல்லவன் யார்? ஆகையால் நான் தோல்வியடைந்தது நியாயம்தான்! என்றான்."

🙏

திருவரங்கத்து மாலை - 066  /114 :

 🙏

ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 16/25 (பாரிஜாத மரம்)

 🙏

முப்பது முக்கோடி தேவரும் , மோகித்து , வீழ்ந்தனர் !

 🙏

அருள் கொண்டல் அன்ன , அரங்கர் ;  ஓசையில் , அண்டம் எல்லாம் ;

வெருள் , கொண்டு ; இடர் பட ; மோகித்து , வீழ்ந்தனர் ! வேகமுடன் ,

தருக்கொண்டு , போகப் பொறாதே , தொடரும் , சதமகனும் ;

செருக் கொண்ட , முப்பது முக்கோடி தேவரும் , சேனையுமே !

 🙏

பதவுரை :

 🙏

தருக்கொண்டு போக .............பாரிஜாத மரத்தைப் , பெயர்த்து , துவாரகைக்குக் கொண்டு போக ;

பொறாதே .............................அதனை , மனம் பொறுக்காமல் ;

வேகமுடன் தொடரும் ............வேகத்தோடு , பின் தொடர்ந்த ;

சத மகனும் ............................நூறு யாகங்கள் , செய்த இந்திரனும் ;

செருக் கொண்ட ...................போர் செய்யும் ,

முப்பது முக்கோடி தேவரும் ... முப்பது முக்கோடி தேவர்களும் ;

சேனையுமே .......................... அவர்களது , படையும் ;

அருள் கொண்டல் அன்ன .......கருணை , மழை பொழியும் , மேகம் போன்ற  ;

அரங்கர் சங்கு ஓசையில் ........திரு அரங்க நாதரது , சங்கின் ஓசையால் ;

அண்டம் எல்லாம் ...................அகில உலகங்களும் ;

வெருள் கொண்டு ...................இடர் பட , அச்சம் கொண்டு , துன்பம் அடைய ;

மோகித்து வீழ்ந்தனர் ..............மயக்கம் அடைந்து , வீழ்ந்தனர் !

 🙏
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று,
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்,
செப்ப முடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்,
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்,
நப்பினை நங்காய்! திருவே! துயிலெழாய்,
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை,
இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்.

கோடானு கோடி தேவர்களுக்கும் நித்யசூரிகளுக்கும் முதல்வனாக இருப்பவனே! கிருஷ்ணா! தேவர்களுக்கு ஒரு துன்பம் வருவதற்கு முன்னதாகவே, அவர்கள் உன்னை நினைத்த மாத்திரத்தில் அவர்களுக்கு முன்பாகச் சென்று அவர்களுடைய துன்பங்களைத் தீர்ப்பவனே! கம்பீரமும் மிடுக்கும் கொண்டவனே! உறக்கத்தில் இருந்து எழுந்து வருவாயாக' என்கிறாள் ஆண்டாள்.
'முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே' என்பதற்கு, தேவர்களுக்கு முன்பாகச் சென்று, அவர்களுடைய இடத்தில் இருக்கும் பாரிஜாத விருட்சத்தைப் பெற்று வந்ததையும் குறிப்பிடலாம்.
"ஆண்டாள் திருவடிகளே சரணம்"

தொடரும்...    
 
ஓம் நமோ நாராயணாய!