விஷ்ணு புராணம் - பகுதி 112 - குரங்கனைக் கொன்ற கதை
விஷ்ணு புராணம் - பகுதி 112
குரங்கனைக் கொன்ற கதை
===================
நாம் ஒரு செயலை செய்ய தொடங்கும் முன் அந்த செயலுக்கு ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து செய்தால் நம் செயல் மட்டும் இல்லை எண்ணமும் செயலுக்கான முழுமையும் நம் வசப்படும்.காரணம் நம் எண்ணம் செயல் இரண்டும் கால சக்கரத்தில் இணைக்கப்பட்டுள்ளன.கால சக்கரம் நம் கர்ம பலனுக்கு ஏற்ப பலனை கொடுக்கும்:
ஒருவருக்கு கோபம் அதிகமாகி விட்டால் அவருக்கு எதிரிகளே தேவையில்லை.அந்த கோபமே அவரை வீழ்த்தி விடும்.அதே சமயம் தன் இயலாமையால் இல்லாமல் தற்செயலாக உருவாக்கப்படும் தன் நிலைக்கு உட்பட்ட கோபமே சில சமயங்களில் நன்மைகளை ஏற்படுத்தும்: பரமாத்மா 🚩🌙
"மித்திரா புத்திரரே! மேலும் கேளும். பலராமரின் மற்றொரு மகிமையைச் சொல்கிறேன். நரகாசுரன் என்று ஒரு தேவசத்துரு இருந்தானல்லவா? அவனுக்குத் துவிதன் என்று ஒரு நண்பன் இருந்தான். அவன் ஒரு வானர சிரேஷ்டன். பல பராக்கிரமங்களில் சிறந்தவன். அவன் இந்திரன் ஏவியதால் தனது சிநேகிதனைக் கிருஷ்ணன் கொன்றான் என்று கருதி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு செய்யக்கடவேன் என்று நினைத்தான். அஞ்ஞான மோகத்தால் யக்ஞங்களை அழிப்பதும் பிராணிகளையழித்து, காடுகள், நகரங்கள், கிராமங்கள் முதலியவற்றைத் தீக்கிரையாக்குவதும், மலைகளைத் தூக்கிப்போட்டு ஊர்களை நொறுக்குவதுமாக அந்த துஷ்டன் துவிதன் திரிந்துகொண்டிருந்தான். அவன் சாமரூபியாகையால் பெரியதொரு ரூபமெடுத்து பயிர்களில் விழுந்து புரண்டு, பயிர்களைப் பாழாக்குவதும் அவன் வழக்கம்! இதனால் உலகம் வேதாத்தியயனம், யாகம் முதலிய வைதீகச் சடங்குகள் இல்லாமல் மிகவும் துயரமுற்று இருந்தது. அக்காலத்தில் ஒருநாள் பலராமர் தம் மனைவியான ரேவதியோடும் மற்றும் சில தேவிமாரோடும் ரைவதம் என்ற மலையிலுள்ள வனத்தில் சென்று மத்திய பானஞ் செய்து, மங்கையர் மத்தியில் ஆட்டமும் பாட்டுமாய் உல்லாசமாக இருந்தார்."
"அப்போது வானர வீரனான துவிதன் வந்தான். அவன் பலராமரது கலப்பை உலக்கைகளை எடுத்துக்கொண்டு, அவர் எதிரில் நின்று பற்களை இளிப்பதும், புருவம் நெறிப்பதும் உர்உர் என்று பரிகாசஞ் செய்வதுமாக இருந்தான். மேலும் அவன் பலராமரின் தேவிமாருக்கு எதிரே நின்று நகைப்பதும் குதிப்பதும், மதுபானப் பாத்திரங்களைக் கவிழ்ப்பதும் எறிவதுமாகப் பல வானரச் சேஷ்டைகளைச் செய்துகொண்டிருந்தான். பலராமர், அவனை ஓட்டினார். வெருட்டினார். அவன் அதை மதியாமல் மறுபடியும் கிறீச் கிறீச் சென்று கூவிக்கொண்டு துஷ்டச் செயல்களையே செய்து கொண்டிருந்தான். அதனால் பலராமர் புன்னகை செய்தபடியே உலக்கையை எடுத்து, அந்த வானரத்தின் மேல் எறிந்தார். உடனே அவன் ஒரு மலைக்கல்லை எடுத்து அவர்மேல் எறிந்தான். அவர் அந்தப் பெரிய கல்லைத் தமது உலக்கையால் பல துண்டுகளாக்கினார். அதனால் கோபங்கொண்ட அந்த வானர முரடன் உலக்கையைத் தாண்டி எழும்பி, தன் கையால் அவர் மார்பில் அறைந்தான். உடனே பலராமர் மிகவும் கோபங்கொண்டு தம் முஷ்டியினால் குரங்கின் தலையில் இடித்தார். அந்த இடியால், துவிதன் உதிரங்கக்கிக் கொண்டு உயிர்துறந்து வீழ்ந்தான். மைத்ரேயரே! இன்னும் ஓர் ஆச்சரியத்தைக் கேளும். அந்தக் குரங்கன் வீழ்ந்த போது அவனுடைய உடல் பூமியில் பட்டவுடன் மலையின் கொடு முடியொன்று, இந்திரனது வஜ்ராயுதத்தால் பிளக்கப்பட்டது போல், பல பிளவுகளாய்ப் பிளந்து வீழ்ந்தது. தேவர்கள் பூ மழை பொழிந்தனர். பிறகு தேவர்கள் பல ராமரிடம் வந்து ஓ மகாவீரனே! நீர் ஒரு நற்காரியத்தைச் செய்தருளினீர்! அந்தத்தீய குரங்கன், அசுரர் சார்பில் உபகாரமும், தேவர்களுக்கு அபகாரமும் செய்து வந்ததால் உலகம் துன்புற்றது. இப்போது அவன் உம்மால் நாசமடைந்தான் என்று துதித்து, தங்கள் தேவலோகத்திற்கு மீண்டனர். இவ்விதமாக, ஞானவானாகவும் பூமியைத் தாங்கக்கூடிய ஆதிசேஷனுடைய திருவவதாரமாகவும் விளங்கும் ஸ்ரீ பலபத்திரரான பலராமரின் திவ்வியச் சரித்திரங்கள் பலவுள்ளன."
🙏
திருவரங்கத்து மாலை - 012/114 :
🙏
நான்முகன் , ஆவி எல்லாம் ; நம் நாதருக்கு , ஒரு மூச்சு!
🙏
முன்னாள் , விசும்பும் ; புவியும் ; திசையும் ; முறை , வகுத்த ;
அந்நான்முகன் , தனது , ஆவி எல்லாம் ; மலர் ஆசனை , ஆம் ;
மின்னார் , மழை முகில் , நல் நாகம் , மீதில் ; விழி துயில் , கூர் ;
எம் நாதருக்கு , ஒரு மூச்சு ; என்று வேதம் ,இசைக்கின்றதே !
🙏
பதவுரை :
🙏
முன்னாள் ......................பிரம்மா தோன்றிய , முன் காலத்தில் ;
விசும்பும் புவியும் திசையும் ..ஆகாயத்தையும் , பூமியையும் , எட்டு திசைகளையும் ,
முறை வகுத்த .................வகைப்படுத்தி , உண்டாக்கிய ;
அந்நான்முகன் தனது .........அந்த பிரமனுடைய ;
ஆவி எல்லாம் .................வாழ் நாள் , முழுவதும் ;
மலர் ஆசனை ஆம் ...........தாமரையில் , வீற்றிருக்கும் , திரு மகள் ஆகிய ;
மின்னார் .......................மின்னல் , பொருந்திய ;
மழை முகில் ...................கார் காலத்து , மேகம் போன்று , கரிய , நிறமுடைய ;
நல் நாகம் மீதில் ..............சிறந்த , ஆதி சேஷன் , மேல் ;
விழி துயில் கூர் ...............கண் , வளரும் ;
எம் நாதருக்கு .................நம் பெருமாளுக்கு ;
ஒரு மூச்சு என்று ..............ஒரு சுவாசம் , என்று ;
வேதம் இசைக்கின்றதே .....வேதம் , சொல்லுகிறது !
🙏
ராம ராம ராம ராம !!
எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்க எவன் கானப்படுகிரானோ, அவனே மாருதி எனும் வாயுபுத்திரன்' என்ற வாசகங்களால் ஆஞ்சநேயன் எனும் ஹனுமனுக்கு அடையாளம் காட்டபடுகிறது. ராம ஸேவை ஒன்றையேலட்சியமாகக் கொண்டு, ராமநாமத்தையே யுகம் யுகமாக ஜபித்துக் கொண்டு இருப்பவன் சிரஞ்சீவியான அனுமன்.
ராம நாமத்தை உச்சரித்தால் கோடான கோடி நன்மைகள் ஏற்படும். அதில் முக்கியமானது பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர்.
ஸ்ரீ ராமர் வழிபாடு செய்தால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிப்பதோடு, நாம் எந்த முயற்சி எடுத்தாலும் அதில் வெற்றியும், மன நிம்மதியும் ஏற்படும்.
ஸ்ரீ ராம ஜெயம் எழுதி வேண்டிக் கொண்டால் நாம் இழந்த பதவியை அடையலாம். இழந்ததை செல்வம் திரும்ப கிடைக்கும்.
ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணமாக அமைவது திருமணம். திருமணத்திற்குப் பிறகு ஒருவன் மகிழ்ச்சி, மன நிறைவு, நிம்மதியுடன் இருக்க வேண்டுமானால் அவர்களின் துணையின் அன்பு, ஆதரவு, புரிதல் மிகவும் அவசியம்.
ஒருவருக்கு நிம்மதியான நல்ல துணை அமைந்து விட்டால் அவன் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று வாழ்வான். சிலரின் திருமண வாழ்வில் துணையுடனான கருத்து வேறுபாடுகளால் தம்பதிகள் பிரியும் நிலை ஏற்படுகிறது.
அப்படி பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும், குடும்பத்தில் சகோதர, சகோதரிகளிடையே ஒற்றுமை மேம்பட இனிதே சொல்ல வேண்டிய மந்திர ராம மந்திரம்.
ராமனின் வாழ்க்கையை, ‘ஒரு வில், ஒரு இல், ஒரு சொல்’ என வாழ்ந்து காட்டியவர். அதனால் தான் இன்றளவும் ராமாயணம் போற்றி கொண்டாடப்பட்டு வருகிறது.
ராம நாமத்தை நாம் முழு பக்தியுடன் ஜெபித்தால் நமக்கு மோட்சம் உண்டு. “ராம நாமம் எல்லா நாம ஜபங்களை விட இனிமையானது.
ராம நாமம் மற்ற மூல மந்திரங்களுக்கெல்லாம் மூத்த மந்திரம் என கம்பரால் புகழப்படுகிறது. ராம நாமத்தை உச்சரித்தால் நம் உடலில் மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு, இன்பதை தரும்.
கதிரவனைக் காணக் கைவிளக்கு தேவையா?
நமக்கு எப்பொழுதெல்லாம் சோர்வு ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதாவது உடலும் உள்ளமும் துவளும் போதெல்லாம் வாயுபுத்திரன்
அனுமன் புஷ்டியை அளித்துக் காப்பான்.
சங்கடங்கள், ஆபத்துகள் நிறைந்த நேரங்களில் மனம் நிலைகுலையாது செயலாற்றும் நிர்பயத்துவம் என்ற பயமின்மை தரும் மகிமை அனுமனை வணங்கினால் கிடைக்கும் .
ஒரே பகலில் கதிரவனிடமிருந்து ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கற்ற, அனுமான் என்கிற புத்திமான். புத்தி வளர்வதற்கு அவனடி பற்றுவோம்.
புத்தியின் வலிமையும் அறிவின் கூர்மையும் மிகுந்தவன், அனுமன். தோல்வியின் தொடர்ச்சியில் மனம் கலங்கிய நிலையில் எதிலும் முடிவெடுக்காமல், எதைக் கண்டாலும் தடுமாறும் நிலை மாற்றி நமக்கு வெற்றித்திருமகளின் கருணை பொழியும் பார்வையைப் பெற்றுத்தருவான் ராமதூதன் அனுமான் ...
அனுமனை அணுகி அவனடி பணிந்து வேண்டினால் இம்மையிலும் மறுமையிலும், சதுர்வித புருஷார்த்தங்களும், புத்தி, வித்தை, வீரம், தைரியம், வாக்கு போன்ற அஷ்டலக்ஷ்மியின் அருளும்,
நிச்சயம் கிடைக்கும்.
யார் யாருக்கு, என்ன என்ன எப்பொழுது எங்கெங்கே எப்படியெல்லாம் வேண்டுமோ, அவையெல்லாம் கிட்டும். அவனிடமில்லாத்து ஒன்றில்லை. ஆகவே அவனை வேண்டினால் அனைத்தும் கிட்டும்.
பலவானுக்கெல்லாம் பலவான் என்று நாம் நினைக்கும் பீமனுக்கும் பெரிய பலவான் வாயு புத்திரனை வணங்குவோம். வலிமை மிகப் பெறுவோம்.
அநுமனை வணங்கினால் நாளும் கோளும் நம்மை வாட்டாது.
சோகமும் துரோகமும் நம்மை அண்டாது..
அஞ்சனா கர்ப்பஸம்பூதம் குமாரம் ப்ரும்ம சாரிணம்,
துஷ்டக்ரஹ வினாசாய ஹனுமந்தம் உபாஸ்மஹம்மஹே
அனைத்து அலுவல்களையும் ஆனைமுகனின் ஆதரவில் தொடங்குகிறோம். முயற்சிகள் முழுமையாக முடியும்போது மும்மூர்த்திகளின் முழுமையாம் மாருதியின் திருவடி பணிகிறோம்.
முடியாத பணிகளையும் முடித்து வைப்பவன் ஜெய மாருதி.
அசாத்தியத்தைச் சாதிப்பவன். இராமதூதன்,
அஸாத்ய ஸாதக ஸ்வாமின்; அஸாதயம் தவகிம் வத
ராமதூத தயாஸிந்தோ மத் கார்யம் ஸாதய ப்ரபோ
காற்று ஈன்ற காவியமாம் நாவரசை நாளும் நம்பி நாமும், தொழுவோம்.
நமோஸ்து ராமாய ஸ லக்ஷ்மணாய
தேவ்யைச தஸ்ய ஜனகாத்மஜாயை
நமோஸ்து ருத்ர இந்தர யம அநிலேப்யக
நமோஸ்து சந்தராக்க மருத் கணேப்ய:
என்ற அனுமனின் மஹா மந்திரம் உடலில் அயர்ச்சியையும் உள்ளத்தில் தளர்ச்சியையும் ஒருங்கே அகற்றி புத்துணர்ச்சியும் ,
தெளிவும் ,தைரியமும் அளிக்கும் மாமருந்தாக திகழ்கிறது..
ராமநாமம் நினைப்போம்!
ராமநாமம் துதிப்போம்! !
ராமநாமம் பற்றி நிற்போம் நாளும்
தொடரும்...
ஓம் நமோ நாராயணாய!