செல்வம் பெருக குபேர மந்திரங்கள்...
செல்வம் பெருக குபேர மந்திரங்கள்

உங்கள் செல்வம் பெருகவும் பண பிரச்சனைகள் தீர குபேர இரகசியங்கள்  மற்றும் மந்திரங்கள்

கீழே குறிப்பிட்டுள்ள குபேர மந்திரத்தை நாள்தோறும் குறைந்தது 7 முறை உச்சரித்துக் குபேர தேவனை வேண்டுங்கள் குபேர உறவு வாய்க்கும்.

ஓம் …..ஹ்ரீம்….க்ளீம்சௌம்…..ஸ்ரீம்……கும் குபேராய…… நரவாகனாயயக்ஷ ராஜாய…… தன தான்யாதிபதியே… லக்ஷ்மி புத்ராய……ஸ்ரீம்… ஓம்… குபேராய நமஹ.

வெள்ளிக்கிழமைகளில் பூவும் காசும் சமர்ப்பித்து 108 குபேரன் போற்றிசொல்லிக் குடும்பத்துடன் வணங்கி வந்தால் வருமானம் பெருகும்…

🔯குபேரன் மந்திரங்கள்
🔯குபேரன் மூல மந்திரம்:
ஒம்ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லஷ்மி குபேராய நம:

🔯குபேரன் துதி:
ஒம் குபேரம் மநு ஜாசினம் ஸகர்வம் கர்வ விக்ரஹம்
ஸ்வர்ணச்சாயம் கதா ஹஸ்தம் உத்தராதிபதிக் ஸ்மரேத்

பொருள்:- குபேரனே,நர வாகனனே, வடதிசைக்கதிபனே,கதாயுதனே,விருப்பங்கள்
அனைத்தையும் அளிப்பவனே உன்னைத் தியானிக்கிறேன்.

ஒம் ஸ்ரீ யஷ ராஜாய குபேராய வைச்ரவணாய
தன தான்யாதிபதயே தனதான்யஸம் ருதிம்மே
தேஹி தாபய தாபஸ ஸ்வாஹா !!

பொருள்:யட்சராஜனே,குபேரனே,விச்ரவசின் புதல்வனே,செல்வங்களின் அதிபதியே என் அவசியமான தேவைகளை நிறை வேற்றிக் கொள்ள தேவையான செல்வத்தை எனக்கு அருளச் செய்வீராக.

ஒம் க்லீம் ல்ஷ்மி குபேராய தனதான்யாதிபதயே
மம ஐஸ்வர்யம் தனதான்ய விருத்திம் குருகுரு ஸ்வாஹா!!

பொருள்: ஸ்ரீ மகாலஷ்மியின் பூரண அருள் பெற்ற குபேரனே,எனது
வறுமை நீங்கிட தேவையான செல்வத்தை அளிப்பீராக.

குபேர வழிபாடு செய்ய நினைப்பவர்கள் செப்புத் தகட்டில் செய்யப்பட்ட குபேர எந்திரத்தை வாங்கி வந்து வெள்ளிக்கிழமைகளில் குபேர எந்திரத்தின் நான்கு முனைகளிலும் மஞ்சள், சந்தனம் மற்றும் குங்குமம் இட்டு, பூக்கள் சாற்றி, எந்திரத்திற்கு முன்பாக ஒரு தட்டில் சிறிது மஞ்சள் அட்சதை அரிசியை வைத்து  தூபங்கள் கொளுத்தி, குபேர காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதித்து வருவதால் நீங்கள் விரும்பிய பணவரவு அதிகரிக்கும். செல்வம் பெருகும்.

🔯குபேர காயத்ரி :
ஒம் யஷேசாய வித்மஹே
வைஸ்ரவனாய தீமஹி
த்ந்நோ ஸ்ரீத: ப்ரசோதயாத்…

🔯குபேரனின் தியானம்:
மநு ஜவாஹ்ய விமாந வரஸ்திரம் கருடரத்ந
நிபம் நிதி தாயகம் சிவசகம் முகுடாதி விபூஷதம்
வரகம் தந்தம் பஜ துந்திலம்

பொருள்: மனிதர்களால் தாங்கப்படும் விமானத்தில் வருபவரும், கருடன் கண் போன்ற ரத்னம் அணிந்தவரும், நிதிகளின் தலைவரும் சிவபெருமானின் தோழருமான குபேரனை துதிக்கின்றேன்.

🔯செவ்வாய்க் கிழமைகளில் இந்தத்துதியை 12 முறை கூறி வெங்கடாசலபதிக்கு துளசி அர்ச்சனை செய்து வந்தால் லட்சுமி குபேரனைப் போல தனவந்தர்கள் பொருள் உதவி செய்வார்கள்.
ஓம் ஸ்ரீம் ஓம்ஸ்ரீம் க்லீம்ஸ்ரீம்
விநேஸ்வராய நம!”

🔯இந்த மந்திரத்தை தினம் 1008 வீதம் ஜெபித்து ஒரு லட்சம் ஒரு ஜெபித்து விட தரித்திரம் விலகி செல்வ நிலை உயரும் என்பது சாஸ்திரக் கருத்து.
“ஓம் யஷாய குபேராய வைஸ்ரவணாய
தனதான்யாதிபதயே தனதான்ய
ஸம்வ்ருத்திம்மே தேகி தாபய ஸ்வாஹா”

🔯விஷ்ணு சகஸ்ரநாமத்தில் குபேர நிதி சேர்த்துத் தரும் மகா மந்திரம் 46-வது அனுவாகமாக (மந்திரப் பகுதி) வருகிறது.
 சனிக்கிழமை செவ்வாய்க் கிழமைகளில் இந்தத்துதியை 12 முறை கூறி திருப்பதி வெங்கடாசலபதி (பழைய மூலவர் கருப்பு படத்திற்கு)க்கு துளசி அர்ச்சனை செய்து வந்தால் லட்சுமி குபேரனைப் போல தனவந்தர்கள் பொருள் உதவி செய்வார்கள்.
“விஸ்தாரஸ் ஸ்தாவரஸ்தாணு: ப்ரம்மாணம்
பீஜமவ்யயம் அர்த்தோ நர்த்தோ
மகாகோசோ மகாபோகோ மகாதந:”

🔯செல்வம் சேர வழிமுறைகள்:
வந்த செல்வத்தை மதித்துப் போற்றுங்கள்.

வராத வருமானத்தை எண்ணி ஏங்காதீர்கள்.

அவற்றின்மீது ஆசை வைக்காதீர்கள்.

பணம் வந்தால் வாய்பிழந்த ஏழைகளுக்கு வாரி வழங்கி வள்ளலாவேன்! என்று இறைவனிடம் திரும்பத் திரும்பக் கூறுங்கள்.

குபேர வாசலைத் திறந்து விடுவார்.

வரவு-செலவுக் கணக்கை, முறையாய் வைத்திருப்போர்க்குக் கணக்கின்றி செல்வம் வழங்க வேண்டும்! என்பது தெய்வச் சட்டம்.

கணக்கு வைத்து வாழுங்கள்.

கணக்கின்றிச் செல்வம் குவியும்.

பணத்தைப் பிறரிடம் வழங்கும்போது தலைப் பகுதியியை நம் பக்கம் வைத்தபடி வழங்கிப் பிரியா விடைதரவும்.

வாடகை….. பலசரக்கு…. பால்பாக்கி… எனப் பணத்தைப் பிறருக்கு வழங்கும்போதெல்லாம், சீக்கிரம் வேறு வழியில் என்னிடம் வந்து சேர்! எனப் பிரியா விடை கொடுத்து அனுப்புங்கள்.

ஈரம், ஈரத்தை ஈர்ப்பதுபோல் ஏற்கனவே இருக்கும் பணம்தான் புதிய பணத்தை ஈர்த்து வரும். எனவே பர்சில்… வங்கியில்…. பீரோவில் வறட்சி கூடாது. இருப்புத் தொகை அதாவது குறிப்பிட்ட தொகை இருக்கும்போதே செலவை நிறுத்தி விட வேண்டும்.

 நாள்தோறும் கண்கள் பணத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கும் வகையில் பசுமையைப் பராமரிக்கவும்.
தூய்மையற்ற இடத்திற்குள் திருமகள் நுழைய மாட்டாள். வீடு…. அலுவலகம்… கல்லாப்பெட்டி….. பணப்பை…. எனச் செல்வம் புழங்கவேண்டிய இடங்களை எப்போதும் தூய்மையாக வைத்துப் பராமரிக்கவும்.

வணிகத்தை… தொழிலை…. அலுவலகப் பணியை மனமலர்ச்சியுடன் விளையாட்டகச் செய்யுங்கள். சிரிப்பவர்களைப் பார்த்தே செல்வ லட்சுமி வருகிறாள். சிடுமூஞ்சிகளையும் அழுமூஞ்சிகளையும் பார்த்து மூதேவிதான் விரும்பி வருகிறாள். சிரித்து வாழுங்கள். சிரிப்பவர்களுடன் சேர்ந்து வாழுங்கள்.

குபேர லிங்கம் படத்தைப் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பண வருமானம் குறையாது.