சுந்தரர் தேவாரம்...
சுந்தரர் தேவாரம்:

குளிர் தரு
திங்கள்
கங்கை
குரவோடு
அரவு
கூவிளமும்

மிளிர் தரு புன் சடை மேல் உடையான்

விடையான் விரை சேர்

தளிர் தரு
கோங்கு
வேங்கை,
தட மாதவி
சண்பகமும்

நளிர் தரு நன்னிலத்து பெருங்கோயில் நயந்தவனே.

இறைவன் அழகு மிளிரும் தனது சடையில் குளிர்ச்சி தரும் சந்திரன், கங்கை, குரா மலர் ஆகியவற்றோடு அரவு- பாம்பு, கூவிள மலர் ஆகியவற்றையும் உடையவன், விரைந்து சேரும் காளையினை வாகனமாக உடையவன்,

செழித்து வளர்ந்த தளிர்களுடன் இருக்கும் கோங்கு, வேங்கை, மாதவி- குருகத்தி, செண்பகம் ஆகிய மரங்கள் கொண்ட,

நளினம் மிகுந்த திருநன்னிலத்து பெருங்கோயிலில் விரும்பி வாழ்பவன் ஆவான்.

திருச்சிற்றம்பலம்.