இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3
டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி
வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்த 2
டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்தது. இதனால், டெஸ்ட்
கேப்டன்ஷிப்பில் இருந்து விராட் கோலி விலகினார்.
இதைத் தொடர்ந்து, நடைபெற்று வரும் ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி
முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி தொடரை இழந்தது.
இந்திய அணியின் தொடர் தோல்வியால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்த போதிலும்,
இந்தியா கடைசி ஒருநாள் போட்டியில் ஆறுதல் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு
நிலவியது.
இந்நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 3வது மற்றும் கடைசி
ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில்
நடைபெற்றது.
இந்திய அணி தரப்பில், லோகேஷ் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், விராட்
கோலி, ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், யுஸ்வேந்திர
சாஹல், ஜெயந்த் யாதவ், , தீபக் சாஹர், பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர்
இடம்பெற்றுள்ளனர்.
அதே போல, தென்ஆப்பிரிக்கா அணியில், குயின்டான் டி காக், ஜேன்மன் மலான்,
பவுமா (கேப்டன்), மார்க்ராம், வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர்,
பெலக்வாயோ, கேஷவ் மகராஜ், பிரிட்டோரியஸ், சிபாண்டா மஹேலா, நிகிடி ஆகியோர்
இடம்பெற்றுள்ளனர்.
3வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு
செய்தது. இதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணியில் குயிண்டான் டி காக்கும் ஜேன்
மேன் மலானும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். 3வது ஓவரில்
ஜேன்மேன் மலான் 1 ரன் எடுத்திருந்த நிலையில், திபக் சாஹர் வீசிய பந்தில்
ரிஷப் பண்ட் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து வந்த கேப்டன் டெம்பா பவுமா 8 ரன்க் எடுத்திருந்த நிலைய்ல்,
கே.எல்.ராகுலால் ரன் அவுட் செய்யப்பட்டார். இவரை அடுத்து வந்த எய்டன்
மார்க்ராம் 15 ரன் எடுத்திருந்த நிலையில், 12வது ஓவரில், தீபக் சாஹர்
பந்தில் கேட்ச் கொடுத்து வெளியெறினார். இதனால், தென் ஆப்பிரிக்க அணி சற்று
அதிர்ச்சி அடைந்தது.
அதே நேரத்தில், மறுமுனையில் குயிண்டன் டி காக் நம்பிக்கையுடன்
நிதானமாகவும் உறுதியாகவும் விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த ராஸி
வான்டெர் துஸ்சென் நிலைத்து விளையாடினார்.
அதிரடியாக விளையாடிய குயிண்டன் டி காக் 28வது ஓவரில் 100 ரன்களை எடுத்து
சதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து, ராஸி வென் டெர் துஸ்சென் 34.1 ஓவரில்
50 ரன்கள் எடுத்து அரை சதம் அடித்தார். தற்போது தென் ஆப்பிரிக்கா அணி நல்ல
ரன் விகிதத்தில் 35 ஓவர்களுக்கு தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்
இழப்புக்கு 212 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
சிறப்பாக விளையாடி வந்த குயிண்டன் டி காக்124 ரன், ராஸி வென் டெர்
துஸ்சென் 52 ரன் எடுத்திருந்த நிலையில், அடுத்தடுத்து அவுட் ஆகி தென்
ஆப்பிரிக்க ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இவர்களைத் தொடர்ந்து வந்த
வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், தென் ஆப்பிரிக்கா அணி
49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 287 ரன்கள் எடுத்தது.
இதனால், இந்திய அணி 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்
விளையாடியது.
இந்திய அணியில், கே.எல்.ராகுலும் ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக் காரர்களாக
களம் இறங்கினார்கள். கே.எல். ராகுல் 9 ரன் எடுத்திருந்த நிலையில்
ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு தவான் உடன் ஜோடி சேர்ந்த கோலி நிதானமாக
விளையாடினார்கள். ஷிகர் தவான் 61 ரன் எடுத்திருந்த நிலையில், ஆண்டி
பெஹ்லுவாயோ பந்தில் குயிண்டன் டி காக் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதற்கு அடுத்து வந்த ரிஷப் பண்ட் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
ஆனாலும், நிலைத்து நின்று விளையாடிய அரை சதம் அடித்தார். 65 ரன்கள்
எடுத்திருந்த நிலையில், கேஷவ் மஹராஜ் பந்தில், பவுமாவிடம் கேட்ச் கொடுத்து
அவுட் ஆனார். இவரையடுத்து ஷ்ரேயாஸ் ஐயர் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்
தீபக் சாஹரும் சூர்யகுமார் யாதாவும் நிதானமாக விளையாடினர். நன்றாக
விளையாடிய சூர்யகுமார் யாதவ் 39 ரன்னில் அவுட் ஆனார். ஜெயந்த் யாதவ் 2
ரன்னில் அவுட் ஆனார். ஆனாலும், மறுமுனையில் அதிரடியாக விளையாடிய தீபக்
சாஹர் அரை சதம் அடித்து வெற்றி இலக்கை நோக்கி அழைத்துச் செல்வார் என்று
எதிர்பார்த்த நிலையில், 34 பந்துகளில் 54 ரன் எடுத்திருந்தபோது, இங்கிடி
பந்தில் பிரிட்டோரியஸ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த
வீரர்கள் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வார்கள், இந்தியா ஆறுதல் வெற்றி
பெறும் என்று எதிர்பார்த்தால், பும்ரா 12 ரன்னில் அவுட் ஆனார்.
இந்திய அணி 49.1 283 ரன்கள் எடுத்து ஓவரில் ஒரு விக்கெட் மட்டுமே
கைவசம் இருந்த நிலையில், 5 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவை இருந்த நிலையில்
சாஹல் பிர்ட்டோரியஸ் வீசிய பந்தை தூக்கி அடித்து மில்லரிடம் கேட்ச்
கொடுத்து அவுட் ஆனார். இதனால், தென் ஆப்பிரிக்கா அணி 4 ரன் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது. இந்திய அணி ஹாட்ரிக் தோல்வியடைந்தது. 3 ஒரு நாள்
போட்டிகளையும் வெற்றி கொண்டு தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணியை ஒயிட் வாஷ்
செய்தது.