சௌந்தர்ய லஹரி....
சௌந்தர்ய லஹரி

               🍃🌹🍃

அராலை ஸ்வாபாவ்யா-தலிகலப-ஸஶ்ரீபி ரலகை

பரீதம் தே வக்த்ரம் பரிஹஸதி பங்கேருஹருசிம் |

தரஸ்மேரே யஸ்மின் தஶனருசி கிஞ்ஜல்க-ருசிரே

ஸுகன்தௌ மாத்யன்தி ஸ்மரதஹன சக்ஷு-ர்மதுலிஹ || 45 ||

தேவியின் நெற்றியின் ஓரங்களில் மெல்லிய கேசங்கள் மென்மையாக ஆடுகின்றன. மிருதுவான முளைகள் அவை! எனவே சில சமயம் தெரியும். சில சமயம் தெரியாது. இளம் வண்டுகள் ஏன் அங்கே ஊஞ்சலாடுகின்றன..?

தேவியின் முகமான தாமரையின் ரசத்தை முகர்வதற்காகவே அதைச் சுற்றி அவை வந்துள்ளன. மிளிரும் தேவியின் முகம் சிவப்புத் தாமரை மலரை விட அழகாக மிளிர்கிறது. இதுதவிர தேவியின் பளிச்சிடும் பற்களோ அழகாக இருக்கின்றன. தேவியின் முகத்தைத் தாமரையாக மனதில் வைத்து தியானம் செய்பவர்களுக்கு தாமரையில் வசிக்கும் லக்ஷ்மியின் பூரண அருள் கிடைக்கும். இந்த ஸ்லோகத்தை தியானம் செய்தால்  அஷ்டலட்சுமிகளும் நம் வீட்டில் வந்து தங்குவார்கள்.

பலன்கள்:

தினமும் ஆயிரம் முறை 45 நாட்களுக்கு ஜெபித்து வர மேலே சொன்ன அஷ்டலக்ஷ்மி கிருபை தவிர வருங்காலத்தை உணரும் சக்தி உண்டாகி சொன்ன சொல் பலிக்கும். வாக்கு சக்தியும் ஏற்படும். செல்வாக்கும் கூடும்.