திரு அருணை திருப்புகழ்...
திரு அருணை திருப்புகழ்.

முத்தைத்தரு பத்தித் திருநகை
     அத்திக்கிறை சத்திச் சரவண
          முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
     முற்பட்டது கற்பித் திருவரும்
          முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
     ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
          பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
     பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
          பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
     நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
          திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
     தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
          சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
     குக்குக்குகு குக்குக் குகுகுகு
          குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
     வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
          குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.

🙏🏻 செந்தில் ஆண்டவருக்கு அரோகரா 🙏🏻
🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒

பன்னிருநாமம்(5).....!!!

விட்டு வலவயிற்றின் கண் வடக்கும் விடாது நின்று *
மட்டவிழ் தாமரைத் தாது நிறங்கொண்ட மேனியனாய்த் *
தொட்டகலப்பைகள் ஈரிரண்டாலும் துயர் அறுக்கும் *
கட்டெழில் சோலைக் கரிகிரிமேல் நின்ற கற்பகமே.

ஸ்ரீ விஷ்ணு - தாமரைத் தாதுவின் பொன்நிறம் – நான்கு திவ்ய கலப்பைகள் - வடக்கு திசை - புண்ட்ர ஸ்தானம் - வயிற்றின் வலப் புறம்

மிக்க அழகுள்ள சோலைகள் சூழ்ந்த ஸ்ரீஹஸ்திகிரியின்
மேலே எழுந்து அருளியுள்ள கல்பவ்ருக்ஷம் போன்ற பேரருளாளன்
விஷ்ணுவாக இருந்து வயிற்றின் வலப் புறத்திலும் வடதிசையிலும் நீங்காது தங்கி
தேன் ஒழுகுகின்ற தாமரையின் மகரந்தத்தை நிறத்தைக் கொண்ட திருமேனியுடையனாய்
கையில் ஏந்திய கலப்பைகள் நான்கினாலும் அடியேன் துன்பத்தை போக்கி அருள்கிறான்.

விஷ்ணும் சதுர்ஹலம் வந்தே பத்மாகிஞ்சல்க ஸன்னிபம்

சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகள சரணம்...!