அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை... குறைந்தபட்ச கல்வித்தகுதி போதும்...
அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) தொழில்முறை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள நுழைவுத் தேர்வு மையத்தில் (Centre for Entrance Examinations) தொழில்முறை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தினசரி கூலி அடிப்படையில், 6 மாத காலத்திற்கு நிரப்படும்.  தகுதியுள்ளவர்கள் 04.02.2022 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தொழில்முறை உதவியாளர் (Professional Assistant – I)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : B.E/B.Tech in CSE/IT

சம்பளம் : தினசரி ரூ.797

உதவியாளர் (Labourer)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பிற்கு குறைவாக படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : தினசரி ரூ.321

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.annauniv.edu/pdf/Staff%20Advt.pdf என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று, அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி

The Director, Centre for Entrance Examinations, Anna University, Chennai -600025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.02.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/Staff%20Advt.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.