ராகு கேது பெயர்ச்சி 2022 - 2023:- 12 ராசிகளுக்கான சுருக்கமான பலன்கள்
ராகு கேது பெயர்ச்சி 2022 - 2023:-  12 ராசிகளுக்கான சுருக்கமான பலன்கள்

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

மேஷம் ராசி ராகு கேது பலன் :

ராகு ஜென்ம ராசியிலேயே வருவதால் இந்த பெயர்ச்சியின் காரணமாக உங்களுக்கு மன இறுக்கத்தைத் தருவதாக இருக்கும்.

கேது ராசிக்கு 7ம் இடமான தொழில், கூட்டாளி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.

நல்ல லாபம் வருகிறதே என நினைத்து பெரிய முதலீடுகளைச் செய்ய வேண்டாம். சிறியளவிலான முதலீடுகள் மட்டும் அதுவும் நன்கு ஆலோசித்துச் செய்யவும்.

புதிய விஷயங்கள், முயற்சிகளை செயல்படுத்தும் போது கூடுதல் கவனமும், சிந்தித்து செயல்படுவதும் அவசியம்.

சட்டப்படியாகவும், ஒழுங்காகவும் நாம் செயல்பட்டால் கேது சரியான பாதையையும், நல்ல பலனையும் தருவார். இல்லையேல் நீங்கள் தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும்.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️


ரிஷபம் ராசி ராகு கேது பலன்:

ராகு கேது 2022 பெயர்ச்சியின் போது ரிஷப ராசிக்கு ராகு உங்கள் ஜென்ம ராசியிலிருந்து 12ம் இடமான விரய, மோட்ச ஸ்தானத்திற்கு செல்கிறார்.

கேது பகவான் 7ம் இடத்திலிருந்து 6ம் வீடான கடன், நோய், எதிரி ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளனர். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்குச் சாதகமானதாக இருக்கும்.

புதிதாக வேலை தேடக்கூடியவர்களுக்கு விரும்பிய வகையில் நல்ல வேலை கிடைக்க வாய்ப்புகள் உண்டு; ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

நிதிநிலையில் என்ன தான் பிரச்னை ஏற்பட்டாலும் அதை சிறப்பாக சமாளிக்கக்கூடிய திறமை ரிஷப ராசியினரிடம் உள்ளது.

நீங்கள் விரும்பி செய்யக்கூடிய விஷயங்கள் காலதாமதம் ஏற்பட்டாலும் அதில் புதிய அனுபவத்தைப் பெறுவீர்கள்

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

மிதுனம் ராசி ராகு கேது பலன்:

மிதுன ராசிக்கு 11ம் இடத்திற்கு ராகுவும், கேது 5ம் வீட்டிற்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர்.

நிதிநிலை அதிகரித்தாலும், கூடவே திடீர் செலவுகளும் உங்களைத் துரத்தும். நன்மையும், கெடுபலனும் சேர்ந்த கலவையான பலன்களைப் பெறுவீர்கள்.

உங்களின் நிதி நிலை ஏற்ற இறக்கங்களுடன் தான் இருக்கும். வீண் செலவை கட்டுப்படுத்திச் சேமிப்பது அவசியம்.

துரித உணவுகளை எடுத்துக் கொள்வதும், தூக்கத்தைத் தவிர்ப்பதும் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

உங்களின் உழைப்புக்கு ஏற்ற நல்ல முன்னேற்றமும், லாபத்தையும் அடைவீர்கள்.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

கடகம் ராசி ராகு கேது பலன்:

கடக ராசிக்கு ராகு 10ம் இடமான கர்ம, தொழில் ஸ்தானத்திற்குப் பெயர்ச்சி ஆக உள்ளார். கேது பகவான் உங்கள் ராசிக்கு 4ம் இடமான சுக, தாயார் ஸ்தானத்தில் அடுத்த ஒன்றரை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்ய உள்ளனர்.

உங்களுக்கு நிதி ரீதியான முன்னேற்றத்தைத் தருவதாக இருக்கும். வீண் செலவைக் கட்டுப்படுத்தவும்.

நீங்கள் தொழில் அல்லது வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தால் புதிய முயற்சிகள், சிந்தனைகள் மூலம் முன்னேற்றமும், முதலீடுகளும் அதிகரிக்கும்.

நேர்மறை எண்ணத்துடன் இருப்பீர்கள். பழைய விஷயங்களை மறந்து மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். உங்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். புதிய இலக்கை எட்டுவீர்கள்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் :

வண்டி,வாகன பயன்பாட்டில் கவனம் தேவை. தொலை தூரப் பயணங்களின் போது கவனம் தேவை. ஆரோக்கியம் சாந்த விஷயங்களில் அலட்சியம் வேண்டாம்.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

சிம்மம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள்:

சிம்ம ராசிக்கு 9ல் ராகு வருவது சிறப்பல்ல. அதே சமயம் 3ல் கேது அமைவது சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம்.

தந்தையின் ஆரோக்கியம், தந்தை வழி உறவில் பிரச்சினைகள் வரும்.

ஞானத்தை தரக்கூடிய கேது 3ம் பார்வையாக உங்கள் ராசிக்கான பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்ப்பதால், வம்பு, வழக்குகளில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். பிரச்சினைகளிலிருந்து நல்ல பாடம் கிடைக்கும். திருமணமானவர்களுக்குக் குழந்தை பாக்கியம் ஏற்படும்

அதோடு சனிபகவான் 6ம் இடத்தில் இருப்பது மேலும் சிறப்பு. அதனால் உங்களின் தொழில், வேலையில் நற்பலன்கள் தரும்.

உத்தியோகம், தொழில் போன்றவற்றில் எளிதாக முடிய வேண்டிய வேலைகள் சற்று கடினமாகவும், அலைச்சல் தந்து அனுபவத்தைத் தரும்.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️


கன்னி ராகு கேது பெயர்ச்சி பலன்கள்:

கன்னி ராசிக்கு 8ல் ராகு, 2ல் கேது அமர்கின்றனர் இது சாதகமற்ற நிலை என்றாலும், பாவ கிரகங்கள் பாவ ஸ்தானத்தில் இருப்பின், அதனால் ஏற்படக்கூடிய கெடுபலன்களை முற்றிலும் நீக்கி விடுவார்கள் என்பதால் அந்த வகையில் ஏற்படக்கூடிய கெடுபலன்களை நீக்குவார்.

உங்களுக்கு தனவரவு சிறப்பாக இருந்தாலும், அதே அளவுக்கு செலவுகளும் ஏற்படும்.

கேது 12ம் வீடான விரய ஸ்தானத்தைப் பார்ப்பதால் வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பணப் பரிமாற்றம், கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயங்களில் நீங்கள் நிதானத்துடன், கவனமாக நடந்து கொள்வது அவசியம்.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

துலாம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள்:

துலாம் ராசிக்கு ராகு களத்திர ஸ்தானமான 7ம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். ஞானத்தைத் தரவல்ல கேது பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.

திடீர் செலவுகள் உங்களின் நிதி ரீதியான நெருக்கடிகள் ஏற்படுத்தலாம்.

உங்களின் தொழில் முதலீடு அல்லது விரிவுபடுத்துவதற்கான செயல்பாடுகளில் கவனமுடன் செயல்படுவது அவசியம்.

நீங்கள் எதிர்பார்த்த பலனை அடைய உங்கள் தொழில், வேலை, பொறுப்புக்கள் என ஏதுவாக இருந்தாலும் அதில் கூடுதல் உழைப்பு போட வேண்டி இருக்கும். அடிக்கடி வெளியூர் சென்று வருவதற்கான வாய்ப்பும், அதில் சாதக பலனை எதிர்பார்க்கலாம்.

நீங்கள் விரும்பிய செயல்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும்.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

விருச்சிகம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள்:

மற்ற ராசிகளை விட மிகவும் அற்புத பலன்களை வரும் ராகு - கேது பெயர்ச்சி மூலம் விருச்சிக ராசியினர் பெற உள்ளனர்.

இந்த நிகழ்வின் போது , கேது ராசிக்கு 12ம் இடத்திலும், ராகு 6ம் இடத்திலும் பெயர்ச்சி ஆகின்றனர்.

அனைத்து கிரகங்களும் உங்களுக்கு ஒட்டுமொத்தமாகச் சாதக பலன்கள் தரக்கூடியதாகத் தான் இருக்கும்.


விருச்சிகம் ராகு கேது பெயர்ச்சி - மிக அதிர்ஷ்ட பலன் பெறும் ராசிகள்


திருமண முயற்சிகளில் கைகூடும்

உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

உங்கள் செயல்பாடுகளில் இருந்த தடை, தாமதங்கள் நீங்கும். புதிய திட்டங்களை வகுத்து அதில் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள்.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

தனுசு ராகு கேது பெயர்ச்சி பலன்:

தனுசு ராசிக்கு கலவையான பலன்களைத் தரக்கூடியதாக ராகு - கேது பெயர்ச்சி தர உள்ளது. ராசிக்கு 11ம் இடமான உப ஜெய லாப ஸ்தானத்தில் கேது, ராகு 5ம் இடமான பூர்வ, புண்ணிய, புத்திர ஸ்தானத்திலும் பெயர்ச்சி ஆகின்றனர்.

ராகு மேஷத்தில் எனும் சுப இடத்தில் இருப்பதால், அந்த பிரிவின் மூலம் பெற்றோருக்கு ஆறுதலும், வருமானம், நற்பெயர் என நேர்மறையான விஷயங்கள் நடக்கும்.

தொழில், வியாபாரம் சார்ந்த விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கக்கூடியதாக இருக்கும். தர்ம, நியாயங்களுக்கு உட்பட்டுச் செயல்படுவீர்கள். நியாயப்படி தொழில் செய்து அதிலிருந்து லாபத்தைப் பெறுவீர்கள்.  2022 - வேலையில் முன்னேற்றம் ஏற்படும்

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

மகரம் ராகு கேது பெயர்ச்சி பலன்:

மகரம் ராசிக்கு ராகு 4ம் இடத்திலும், கேது 10ம் இடத்திலும் வருகின்றனர்.

உங்களின் எண்ணங்கள், செயல்பாடுகளில் புதுமையும், புத்துணர்ச்சியும் உண்டாகும்.

தொழில், உத்தியோகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படுவதும், முடிவெடுப்பதன் மூலம் மேன்மை உண்டாகும். கடன் தொல்லையிலிருந்து விடுபடக்கூடிய நல்வாய்ப்புகள் அமையும்.

நீண்ட நாட்களாக இருந்த தடைகள் நீங்கி, உங்கள் வியாபாரத்தில் வெற்றியும், லாபமும் கிடைக்கும்.

தன வரவிலிருந்த இழுபறிகள் நீங்கி, பணம் வந்து சேரும்.

மகர ராசி ராகு கேது பெயர்ச்சி 2022-2023 : ஜென்ம சனி விலகும், மன நிம்மதி கிடைக்கும்

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

கும்பம் ராகு கேது பெயர்ச்சி பலன்:

கும்ப ராசிக்கு ராகு 3ம் இடத்திலும், கேது 9ம் இடத்திலும் வருகின்றனர்.

புதிய முயற்சிகளில் நுணுக்கமாகச் செயல்பட்டு வெற்றி வாகை சூடுவீர்கள். இழுபறியான விஷயங்களை கடுமையான முயற்சியால் செய்து முடிப்பீர்கள். பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படக்கூடும்.

ஆரோக்கியத்தில் சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து குணமடைந்து உடல் நலம் மேம்படும்

நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு சிறந்த பலன்களும், திட்டமிட்ட செயல்களில் இலக்கை அடைவீர்கள்.

தந்தைவழி உறவினர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

மீனம் ராகு கேது பெயர்ச்சி பலன்:

மீனம் ராசிக்கு ராகு 2ம் இடத்திலும், கேது 8ம் இடத்திலும் வருகின்றனர்.

எதிர்பாராத சில உதவி கிடைக்கப் பெறுவீர்கள். சிறு வருவாயும் நிலைத்து நிற்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

ராகு கேது பெயர்ச்சியின் மூலம் வித்தியாசமான மற்றும் விலையுயர்ந்த பொருட்களின் சேர்க்கை உண்டாகும்.

ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. நண்பர்களுடனான விஷயங்களில் கவனம் வேண்டும். பேச்சுக்களில் நிதானமும், பொறுமையும் வேண்டும்.

எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.

உங்களின் இனிமையான பேச்சால் நீங்கள் எண்ணிய விஷயங்களைச் செய்து முடிப்பீர்கள்..

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️