ரூ.399-ரீசார்ஜ்க்கு முழுமையான கேஷ்பேக் வழங்கியுள்ளது ஜியோ நிறுவனம்.
பழைய வாடிக்கையாளர்கள் அல்லது புதிதாக ஜியோ சேவையை பெறுவர்கள் யார் வேண்டுமானலும் இந்த அட்டகாசமான சலுகையை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் 100சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும், அதாவது ரூ.399-மதிப்புள்ள கூப்பன் மை ஜியோ மொபைல் அப்ளிகேஷனில் சேர்க்கப்படும், பின்பு ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது அதைப் பயன்படுத்தினால் 399 ரூபாயக்கு சலுகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று(டிசம்பர் 28) முதல் ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் இந்த சலுகையைப் பெற முடியும். இருந்தபோதிலும் கிடைக்கு 399 ரூபாய் மதிப்புள்ள கூப்பனை 2019-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதிக்குள் பயன்படுத்திவிட வேண்டும். அதற்கு பின் அந்த கூப்பன் செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ நிறுவனத்தின் ரூ.399 ரீசார்ஜ் திட்டம் மூலம் 1.5ஜிபி டேட்டா 84நாட்களுக்கு கிடைக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இலவச கால் அழைப்புகள், தினசரி 100எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற சலுகைகளும் கிடைக்கும் என ஜியோ நிறுவனம் கூறியுள்ளது.