ஓடித்தொடு
ஆட்டக்காரர்கள் : 

அனைவரும் விளையாடலாம்


ஆடும் முறை :

குழந்தைகள் ஆங்காங்கே மைதானத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லைக்குள் நிற்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட விரட்டுபவர் விசில் ஒலித்த பிறகு விரட்ட ஆரம்பிக்க வேண்டும்.

தொடப்படாமல் தப்பித்துக்கொள்ள அனைவரும் ஓடித் தப்பித்துக் கொள்ள வேண்டும். ஓட்டுபவர் எல்லையை தாண்டி ஓடக்கூடாது . விரட்டுபவரால் ஒருவர் தொடுபட்டு விட்டால் , தொடுபட்டவர் அடுத்த விரட்டுபவராக மாறி , ஆட்டம் மீண்டும் தொடரும் .