நவராத்திரி விழா தகவல் .. தாம்பூலப் பையின் மகிமை !

நவராத்திரி விழா தகவல் ..
தாம்பூலப் பையின் மகிமை !

வெற்றிலை - பாக்கு, மஞ்சள், குங்குமம், சீப்பு, முகம் பார்க்கும் கண்ணாடி, வளையல், மஞ்சள் கயிறு, தேங்காய், பழம், பூ, மருதாணி, கண்மை, தட்சணை, ரவிக்கைத்துணி என வைத்து நவராத்திரிக்கு வழங்கும் தாம்பூல பையில் இருக்கும்.
ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. தாம்பூலம் என்பது வெற்றிலை, பாக்குக்கு வழங்கப்படும் பொதுப் பெயர்.
வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வாசம் செய்கின்றனர். மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு சுமங்கலித் தன்மையை வழங்குகிறது.
சீப்பு, கணவனின் ஆயுளை விருத்தி செய்வதற்காக,
கண்ணாடி, கணவனின் ஆரோக்கியம் காக்க,
வளையல், மன அமைதி பெற,
பாவம் நீங்க, தேங்காய் அளிப்பதே சிறந்தது.
பழம், அன்னதானப் பலன் கிடைக்க,
பூ, மகிழ்ச்சி பெருக,
மருதாணி, நோய் வராதிருக்க,
கண்மை , திருஷ்டி தோஷங்கள் அண்டாதிருக்க,
தட்சணை, லக்ஷ்மி கடாக்ஷம் பெருக,
ரவிக்கைத்துணி, அல்லது, புடவை வஸ்திர தானப் பலன் அடைய வழங்குகிறோம்.
மனிதர்களிடையே பிறர்க்குக் கொடுத்து மகிழும் வழக்கம் வரவே இம்மாதிரி சம்பிரதாயங்கள் ஏற்பட்டன. அப்படி இருக்க, தாம்பூலம் தருவதில் பேதம்பார்ப்பது, தேவியை அவமதிப்பது போலாகும்.
மேற்குறிப்பிட்ட எல்லாப் பொருட்களையும் வசதியுள்ளவர் தரலாம்.
தாம்பூலம் கொடுக்கிற சுமங்கலியும் வாங்கும் சுமங்கலியும் இந்த முறைகளை கடைபிடிக்கும் போது, கொடுக்கும், வாங்கும், இருவருக்கும் மூன்று தேவியரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
நாமும் சந்தோஷமாக இருப்போம். நம்மை சுற்றி உள்ளவர்களையும் சந்தோஷப்படுத்துவோம்
*நலமுடன், வாழ்க வளமுடன் ..

        🙏🏻 நவராத்திரி பூஜை முறை !🙏

9நாள்களும் போட வேண்டிய
கோலங்கள்🙏:

• முதல் நாள் – அரிசி மாவு பொட்டு
• இரண்டாம் நாள் – கோதுமை மாவு கட்டம்
• மூன்றாம் நாள் –முத்து  மலர்
• நான்காம் நாள் – அட்சதை படிக்கட்டு
• ஐந்தாம் நாள் – கடலை பறவையினம்
• ஆறாம் நாள் – பருப்பு தேவி நாமம்
• ஏழாம் நாள் – திட்டாணி (வெள்ளை மலர் களால் ஆன கோலம்)
• எட்டாம் நாள் – காசு பத்மம் (தாமரைக் கோலம்)
• ஒன்பதாம் நாள் – கற்பூரம் ஆயுதம்  (வாசனைப் பொடிகளை கலந்து கோலமிட்டால் சிறப்பு)

ஒன்பது நாள்களும் பாட வேண்டிய ராகங்கள்:

• முதல்நாள் – தோடி
• இரண்டாம் நாள் – கல்யாணி
• மூன்றாம் நாள் – காம்போதி, கௌளை
• நான்காம் நாள் – பைரவி
• ஐந்தாம் நாள் – பந்துவராளி
• ஆறாம் நாள் – நீலாம்பரி
• ஏழாம் நாள் – பிலஹரி
• எட்டாம் நாள் – புன்னாகவராளி
• ஒன்பதாம் நாள் – வஸந்தா

ஒன்பது நாள்களும் அணிவிக்க வேண்டிய மாலைகள்:

• முதல் நாள் – மல்லிகை
• இரண்டாம் நாள் – முல்லை
• மூன்றாம் நாள் – செண்பகம், மரு
• நான்காம் நாள் – ஜாதிமல்லி
• ஐந்தாம் நாள் – பாரிஜாதம் அல்லது வாசனை மலர்கள்
• ஆறாம் நாள் – செம்பருத்தி
• ஏழாம் நாள் – தாழம்பூ, பாரிஜாதம், விபூதிப்பச்சிலை
• எட்டாம் நாள் – சம்பங்கி, மருதாணிப்பூ
• ஒன்பதாம் நாள் – தாமரை, மரிக்கொழுந்து

ஒன்பது நாள்களும் விருந்தினருக்குக் கொடுக்க வேண்டிய பழங்கள்:

• முதல் நாள் – வாழைப்பழம்
• இரண்டாம் நாள் – மாம்பழம்
• மூன்றாம் நாள் – பலாப்பழம்
• நான்காம் நாள் – கொய்யாப்பழம்
• ஐந்தாம் நாள் – மாதுளை
• ஆறாம் நாள் – ஆரஞ்சு
• ஏழாம் நாள் – பேரிச்சம்பழம்
• எட்டாம் நாள் – திராட்சை
• ஒன்பதாம் நாள் – நாவல் பழம்

ஒன்பது நாள்களும் செய்ய வேண்டிய பிரசாதங்கள்:

• முதல் நாள் – சுண்டல், வெண்பொங்கல்
• இரண்டாம் நாள் – புளியோதரை
• மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல்
• நான்காம் நாள் – கதம்பம் (காய்கறிகள் கலந்த கதம்ப சாதம்)
• ஐந்தாம் நாள் – ததியோதனம் தயிர்சாதம், பொங்கல்
• ஆறாம் நாள் – தேங்காய் சாதம்
• ஏழாம் நாள் – எலுமிச்சை சாதம்
• எட்டாம் நாள் – பாயஸôன்னம் ( பால் சாதம்)
• ஒன்பதாம் நாள் – அக்கார அடிசில் (பச்சரிசி,பால், சர்க்கரை கலந்த பால் பாயசம்), சர்க்கரை பொங்கல்.

தேவி சரணம் ! ஸ்ரீ மாத்ரே நமஹ !