எந்த கிழமையில் எந்த கடவுளை வணங்க வேண்டும்? இது தெரிந்தால் உங்களை ஜெயிக்க எவராலும் முடியாது..!

எந்த கிழமையில் எந்த கடவுளை வணங்க வேண்டும்? இது தெரிந்தால் உங்களை ஜெயிக்க எவராலும் முடியாது..!
〰♾〰♾〰
🍂🌷🍂🌷🍂

நாம் தினமும் கடவுளை வணங்குகிறோம். ஆனால் எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும் என்பது நமக்கு தெரியாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரிய நாளாக கருதப்படுகிறது. அந்தந்த நாளில், தெய்வத்திற்குரிய மந்திரங்களை ஜபித்தும், பூஜைகள் செய்தும், விரதம் இருந்தும் வழிபட்டால் அதற்கான முழுபலனையும் பெற முடியும் என்பது ஐதீகம்..

எந்த கிழமையில், எந்த கடவுளை வணங்கினால் நற்பலன்கள் கிடைக்கும்? என்பதை இன்றைய பதிவில் தெரிந்துகொள்வோம் வாங்க..

திங்கட்கிழமை வழிபாடு:🙏

✨சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை அன்று சிவபெருமானையும், சந்திர பகவானையும் வழிபட உகந்த நாளாகும். சோமவாரம் விரதம் இருந்து, சிவபெருமானுக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரை படைப்பது வேண்டிய வரம் அத்தனையும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

✨சந்திரன் மனதை தூய்மை செய்யக்கூடியவர். மனதில் தேவையில்லாத குழப்பங்களும், சஞ்சலங்களும் கொண்டிருப்பவர்கள் திங்கட்கிழமையில் சந்திர பகவானை வழிபட்டால் இன்னல்கள் நீங்கி மனம் தெளிவு பெறும்.

செவ்வாய்க்கிழமை வழிபாடு:🙏

✨செவ்வாய்க்கிழமை என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது துர்க்கை அம்மனும், ராகு காலத்தில் ஏற்றப்படும் எலுமிச்சை விளக்கும் தான். அந்த அளவிற்கு செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மன் வழிபாட்டிற்கு உகந்த நாளாகும்.

✨செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து, ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி துர்க்கை அம்மனை வழிபட்டால், இல்லத்தில் துன்பம் நீங்கி இன்பம் பெருகும். அன்று முருகனுக்கும் உகந்த நாள். அன்றைய தினத்தில் கந்தசஷ்டி கவசம் பாடலை பாராயணம் செய்து, முருகப்பெருமானை மனமுருகி வணங்கினால் வாழ்வில் ஏற்படும் தடைகளை தவிடு பொடியாக்கும். விரதம் இருந்து இருவரையும் அர்ச்சனை செய்து வழிபட்டால் செல்வச் செழிப்பான வாழ்க்கை அமையும்.

புதன்கிழமை வழிபாடு:🙏

✨எந்த ஒரு செயலிலும் வெற்றி பெறுவதற்கு விநாயகருடைய அருள் வேண்டும். முழுமுதற் கடவுளான விநாயகரை முதலில் வழிபட, எல்லாவற்றிலும் சாதகமான பலன்களை தருவார் என்பது ஐதீகம்.

✨புதன்கிழமைகளில் விநாயகருக்கு விரதம் இருந்து வழிபட, எந்த ஒரு காரியமும் தடங்கல் இல்லாமல் நிறைவேறும்.

வியாழக்கிழமை வழிபாடு:🙏

✨வியாழக்கிழமை தட்சணாமூர்த்தி, மகா விஷ்ணு மற்றும் லக்ஷ்மி தேவி ஆகிய கடவுளை வழிபட அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும். இந்நாளில் விரதம் இருந்து இக்கடவுள்களை வழிபடுவதால் வாழ்வில் ஏற்படும் இன்னல்கள் நீங்கி செல்வம் பெருகும்.

✨சுபகாரியத் தடை இருப்பவர்கள், திருமணம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்கள் வியாழக்கிழமையில் தட்சணாமூர்த்திக்கு விரதமிருந்து வழிபாடு செய்யலாம்.

✨அன்று குபேரனுக்கும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது.

வெள்ளிக்கிழமை வழிபாடு:🙏

✨வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகும். வெள்ளிக்கிழமையில் செய்யப்படும் எந்த ஒரு வழிபாடும் செல்வ வளத்தை அள்ளித் தரக் கூடியதாகும்.

✨வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து அம்மனுக்கு விளக்கேற்றி பெண்கள் வழிபாடு செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். சகல விதமான பிரச்சனைகளும் தீர்ந்து வீட்டில் நிம்மதி ஏற்படும்.

✨வெள்ளிக்கிழமை என்பது மங்களகரமான நாளாகவும், மங்களகரமான காரியங்கள் செய்வதற்கு ஏற்ற நாளாகவும் கருதப்படுகிறது. இந்த நாள் மகாலட்சுமிக்கும் உகந்த நாளாகும்.

சனிக்கிழமை வழிபாடு:🙏

✨நவகிரகங்களில் முக்கிய இடம்பெறும் சனிபகவானின் அருளை பெற சனிக்கிழமை மிகவும் சிறந்த நாளாகும். அன்றைய தினத்தில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் சனிதோஷம் விலகி வாழ்வில் முன்னேற்றமும், மனதில் அமைதியும் நிலவும்.

✨இந்நாளில் சனிபகவானுடன் ஆஞ்சநேயர், பெருமாள் மற்றும் காளி தேவிக்கும் வழிபாடு செய்யப்படுகிறது.

✨சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்து வர பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். வீட்டில் கணவன்-மனைவி பிரச்சனை, குடும்ப பிரச்சனைகள் தீர சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபடலாம்.

ஞாயிற்றுக்கிழமை வழிபாடு:🙏

✨நவகிரகங்களில் முதன்மையானவராகக் கருதப்படும் சூரிய பகவானுக்கு ஏற்ற நாள் ஞாயிற்றுக்கிழமை.

✨இந்த நாளில் சூரிய பகவானுக்கு விரதமிருந்து வழிபட்டால், எதிரிகளின் தொல்லைகளில் இருந்து நம்மை காப்பாற்றுவதோடு, நம்முடைய வாழ்க்கையும் அந்த சூரியனைப் போன்று பிரகாசமாக இருக்கும்.